For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்த மாதிரி அடிப்பதில் இஸ்ரேல்தான் கில்லாடி.. இந்தியாவும் தொடருமா?

Google Oneindia Tamil News

சென்னை: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் புகுந்து இந்திய விமானப்படையினர் நடத்திய "சர்ஜிகல் அட்டாக்".. இதுதான் இன்று தலைப்புச் செய்தியாகியுள்ளது. நாடே பரபரப்பாகியுள்ளது. பாகிஸ்தானுடன் போர் வருமா என்ற அச்சமும் அதிகரித்துள்ளது.

அதை அப்புறம் பார்க்கலாம்.. அது என்ன சர்ஜ்சிகல் அட்டாக்.? குறி வைத்து குறிப்பிட்ட இலக்கை மட்டும் ராணுவத்தைக் கொண்டு தாக்குவது. அதுதான் சர்ஜிகல் அட்டாக் என்பதற்கான சுருக்கமான விளக்கம். பெரிய அளவிலான தாக்குதலாக இது இருக்காகது. மாறாக குறிப்பிட்ட இடத்தை மட்டும் குறி வைத்து அந்த இடத்தில் உள்ள இலக்குகளுக்கு மட்டும் பெரும் சேதத்தை ஏற்படுத்தும் வகையிலான தாக்குதல் இது.

What is surgical attack?

மற்றபடி பொதுமக்களுக்கோ, பெரிய அளவிலான இடங்களுக்கோ சேதம் ஏற்படாத வகையில் இந்தத் தாக்குதல் அமையும். இது திட்டமிட்ட திடீர் தாக்குதலாக இருக்கும். எதிரியை நிலை குலைய வைக்கும் வகையில் இருக்கும்.

விமானம் மூலம்தான் பெரும்பாலும் இதுபோன்ற தாக்குதல்கள் நடைபெறும். அதாவது குறிப்பிட்ட இலக்கை குறி வைத்து விமானம் மூலம் குண்டு வீசித் தாக்குவது. இதைத்தான் இப்போது இந்திய விமானப்படையும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செய்துள்ளது. மேலும் இந்தத் தாக்குதலில் கொத்து வெடிகுண்டுகள் பயன்படுத்தப்பட மாட்டாது. அது பெரும் சேதத்தை ஏற்படுத்தக் கூடியதாகும்.

2003ம் ஆண்டு ஈராக்கில் நடந்த போரின்போது அமெரிக்கப் படையினர் இதுபோன்ற தாக்குதல்களைத்தான் நடத்தினர். உண்மையில் இஸ்ரேல் இதுபோன் சர்ஜிகல் தாக்குதல்களில் கில்லாடி ஆகும். அதிக அளவில் அது இதுபோன்ற தாக்குதல்களை நடத்திய அனுபவம் கொண்டது.

இப்போது இந்தியா இதுபோன்ற தாக்குதலில் ஈடுபட்டதை பாகிஸ்தான் நிச்சயம் எதிர்பார்த்திருக்காது. ஆனால் இதுபோல இந்தியா தொடர்ந்து ஈடுபடுமா என்பது எதிர்பார்ப்புக்குரியது.

English summary
A surgical attack is nothing but an army attack. It is carried out by the army on a particular target with a severe damage to the precise enemy area.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X