For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

போலீஸ்: எங்க ஊதுடா....: ப்ஊ.... போலீஸ்: 'சாரி சார்', நீங்க போங்க..

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: டாஸ்மாக் கடைகளை அகற்ற வலியுறுத்தி போராட்டம் நடத்துபவர்களை தடியடி நடத்தி விரட்டிவிடும் போலீசார், டாஸ்மாக் கடைகளுக்கு பாதுகாப்பு அளித்துக்கொண்டுள்ளனர். இதை கிண்டல் செய்து வாட்ஸ்சப்பில் பரவிவரும் ஜோக்குகளை பாருங்கள்.

டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி போராட்டம் நடத்தியவர்களை போலீஸார் தடியடி நடத்தி கலைத்தனர்.. கடையை முற்றுகையிட்டவர்களையும் அடித்து விரட்டினர்.

Whatsapp joke about Tasmac and the police

(அங்கு கடைக்குள் நடைபெற்ற ஒரு கற்பனை உரையாடல்):

போலீஸ் : ஓடுடா ஓடுடா....

ஒருவன் : சார் நான் இங்க குடிக்க வந்தேன் சார்!!!

போலீஸ் : எங்க ஊதுடா....

ஒருவன் : ப்ஊ....

போலீஸ் : 'சாரி சார்', நீங்க போங்க..

இப்படி முடிகிறது அந்த உரையாடல். மற்றொரு வாட்ஸ்சப் காமெடியை படியுங்கள்.

போலீஸ்: ஹெல்மெட் இல்லாம வண்டி ஓட்டிகிட்டு போறீயே, அபராதம் கட்டு.

டூவீலர் நபர்: நான் டாஸ்மாக்கிற்கு குடிக்க போறேன்.

போலீஸ்: மன்னிச்சிருங்க.. நீங்க முதல்ல கிளம்பி போங்க.

இப்படியாக போகிறது ஒரு ஜோக் என்றால், இன்னொன்று ஜோக்கை பாருங்கள். வடிவேலு படத்தோடு பேஸ்புக்கில் அந்த ஜோக் சுற்றுகிறது.

குடிகாரர்: சார், என் பொண்டாட்டி குடிக்க விடமாட்டேங்கிறா, அவள அரெஸ்ட் பண்ணுங்க. இப்படி போகிறது அந்த பேஸ்புக் மீம்ஸ். இவை அனைத்தின் மையக்கருத்துமே, குடிகாரர்களுக்கு அரசு சலுகை காட்டுவது என்பதுதான்.

English summary
Jokes spread via whatsapp about Tamilnadu police who safeguard the Tasmac liquor shops.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X