For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விறுவிறுன்னு எழுந்து... பரபரன்னு வேலை பார்க்க ஆரம்பிச்சு.. வாங்க கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்கலாம்!

Google Oneindia Tamil News

சென்னை: காலையில் எழுந்து அரக்கப் பரக்க சாப்பிட்டு விட்டு, அடித்துப் பிடித்து ஓடி வண்டியை எடுத்து, பஸ்ஸைப் பிடித்து, ரயிலைப் பிடித்து, ஆட்டோப் பிடித்து ஆபீஸுக்கு ஓடி.. சீட்டில் விழுந்து, தண்ணீர் குடித்து சற்றே அமர்ந்து கண்ணை மூடி பெருமூச்சு விட்டபடி.. பைல்களைப் பார்க்க ஆரம்பிக்கும்.. அந்த நேரம் இருக்கே... ஏண்டா என்னைய இப்படி டென்ஷனாவே வச்சிருக்க ஆண்டவா என்ற டயலாக்தான் வந்து போகும்.

என்ன செய்வது.. எல்லோருக்கும் வாழக்கை அஜீத் படம் போல, விஜய் படம் போல அமைவதில்லையே....

ஆனால் அந்தக் கஷ்டத்துலயும் நம்மை ரிலாக்ஸ் ஆக்குவது, சிரிக்க வைப்பது... ஏன் சிந்திக்கக் கூட வைப்பது இந்த வாட்ஸ்ஆப், பேஸ்புக் போன்ற பிரில்லியன்ட் புகலிடங்கள்தான்...

ஆபீஸ் டென்ஷனிலிருந்து சற்று ரிலாக்ஸ் ஆகி.. இந்த வாட்ஸ் ஆப் வசீகரத்தில் சற்று புகுந்து புறப்படுங்கள்...

கசக்கும்.. இந்தத் தேன் கண்டிப்பா கசக்கும்!

பிரேசில் நாட்டு தேன் கசக்கும்.... உங்களுக்குத் தெரியுமா? கேட்கவே ஆச்சரியமாக இருக்கிறதில்லையா!

உலகப்புகழ் பெற்ற மோனாலீசா ஓவியம் இடது கையால் வரையப்பட்டது. இது நிறையப் பேருக்குத் தெரிந்திருக்கலாம். தெரியாதவர்களுக்கு ஆச்சரியமான விஷயம்தான் இது.

Whatsapp relaxes your tension

ஒரு பென்சிலைக் கொண்டு முழுமையாக பயன்படுத்தி அது கரையும் வரை கோடு போட்டால், 58 கி.மீ நீளமான கோடு போடலாமாம்

நாமெல்லாம் ஏசி மெஷின் பக்கம் தலையை வைக்க விருப்பப்படுவோம். நாயும் அப்படித்தான்.. ஆனால் எப்போதும் காற்று வீசும் திசையிலேயே தலை வைத்துப் படுக்குமாம் நாய்.

மனுஷனுக்கு இதயம் நெஞ்சில் இருக்கிறது. ஆனால் நாம் சண்டேக்கி சண்டே சாப்பிடும் இறால் மீனுக்கு இதயம் தலையில் இருக்கிறதாம்..

Whatsapp relaxes your tension

சரி.. ஒரு சீரியஸ் நியூஸ் பாஸ்...!

ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குனரான டிம் குக் தனது மொத்த சொத்துக்களையும் மக்களுக்கு பயன்படும் வகையில் தொண்டு நிறுவனங்களுக்கு அளிப்பதாக தெரிவித்துள்ளார். உலகளவில் அதிக சந்தை மதிப்புடைய நிறுவனமான ஆப்பிள் நிறுவனத்தின் தலைவர் தான் டிம் குக். ஆப்பிள் நிறுவனரான ஸ்டீவ் ஜாப்ஸ் மறைவிற்கு பிறகு இந்நிறுவனத்தின் அனைத்து பொறுப்புகளும் டிக் குக் கைக்கு மாறின.

சென்னையில் ஒரு செம சண்டை .. கேள்விப்பட்டீங்களா...

சென்னை, தண்டையார் பேட்டை காவலர் குடியிருப்பில், கொடுக்கல் வாங்கல் தகராறில், இரண்டு சப்-இன்ஸ்பெக்டர்கள் மனைவிகள் குடுமிப்பிடி சண்டை போட்டது பெரும் பரபரப்பாகிப் போனது. அக்கம் பக்கத்தில் இருந்த போலீசார் தலையிட்டு சமரசம் செய்து இருவரையும் கஷ்டப்பட்டு பிரித்து விட்டனராம்.

Whatsapp relaxes your tension

இது தத்துவம் பாஸ்!

அடுத்த தலைமுறைக்காவது கிரிக்கெட் விளையாட சொல்லிக்கொடுக்காமல் விவசாயம் பண்ண சொல்லி கொடுங்க. ஏனெனில் ஸ்கோர விட சோறு தான் முக்கியம்... இது வாட்ஸ் ஆப்பில் ஒரு புண்ணியவான் போட்டு வைத்த புல்லரிக்க வைக்கும் தத்துவம்!.

Whatsapp relaxes your tension

எத்தாத்தண்டி...!

மதுரைக்குப் போயிருக்கீங்களா... போகாட்டி ஒரு வாட்டி போயிட்டு வாங்க.. ஆனா மதுரை இப்ப உள்ளது மாதிரி அக்காலத்துல சின்னதா இல்லையாம்.. வடிவேலு பாணியில் சொல்வதானால்.. ஆத்தீ... எத்தாத்தண்டி என்று கேட்கும் அளவுக்கு ரொம்பப் பெரிதாக இருந்ததாம். அதன் பார்டரானது, அந்தப் பக்கம் தொண்டி வரையிலும், கீழ் திசையில் நெல்லை வரையிலும் நீண்டு பரந்து கிடந்ததாம்...

Whatsapp relaxes your tension

ரொம்ப நடக்கறீங்களா.. அப்ப இதுதான் காரணம்!

நடப்பதைக் கூட ஜாலியாக எடுத்துக் கொள்ளும் தலைமுறை நம்மளோட தலைமுறை.. அதுக்குக் காரணத்தையும் எப்படி யோசித்து எழுதி வைத்திருக்கிறது பாருங்கள் ஒரு புண்ணிய ஆத்மா...!

ஓ.கே.. "ஜில்"லுன்னு ஒரு டீ சாப்பிட்டுட்டு.. ரெண்டு பிஸ்கட்டை உள்ளே தள்ளிட்டு வாங்க... சுறுசுறுப்பா வேலை பார்க்கலாம்!

English summary
When you are in tension, FB, Twitter and Whatsapp doing the duty of relaxing you.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X