For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இத்தனை சேவைகளுக்கும் ஆதார் கட்டாயமாம்... இப்பவே கண்ணக்கட்டுதே..!

மத்திய மாநில அரசுகளின் நலத்திட்ட உதவிகளை பெற ஆதார் கார்டு அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்டங்களை பெறுவதற்கு மட்டுமின்றி அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஆதார் அட்டை அவசியமாக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளில் கூட மாணவர்களுக்கு ஆதார் அட்டைக்கான புகைப்படம் எடுத்து பதிவேடுகளில் இணைக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

மாணவர்களின் மதிய உணவுத் திட்டத்துக்கும் ஆதால் அவசியம் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் நாடு முழுவதும் புதிய வாகனங்களை பதிவு செய்வதற்கு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் ஆதார் எண் அவசியமாக்கப்படுகிறது.

Where and all Aadhar card is mandatory

இதுவரை மத்திய மாநில அரசுகள் எதற்கெல்லாம் ஆதார் கட்டாயம் என அறிவித்துள்ளது என்பதன் பட்டியல்,

சமையல் எரிவாயுக்கான மானியம் பெற ஆதார் கார்டு அவசியம் என அறிவிக்கப்பட்டது.

முதியோர் ஓய்வூதியம் பெற ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டது.

நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் பயன்பெற ஆதார் கார்டு அவசியமானது.

பொதுவிநியோகத்திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் உணவுப் பொருட்கள் பெற ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட்டது.

வங்கிக் கணக்குகள் தொடங்கு ஆதார் கட்டாயம் என அறிவிக்கப்பட்டது.

ஏற்கனவே தொடங்கப்பட்ட வங்கிக்கணக்கில் ஆதார் எண்ணை சேர்க்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது.

வருமானவரி தாக்கல் செய்ய, பேன் கார்டு பெற ஆதார் அவசியமானது.

மோடியின் பணமதிப்பு ரத்து நடவடிக்கையின் போது பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற ஆதார் அவசியம் என அறிவிக்கப்பட்டது.

பாஸ்போர்ட் பெற ஆதார் கார்டு முக்கியம் என அறிவிக்கப்பட்டது.

அஞ்சல்துறை சேவைகளை பெற வங்கிக்கணக்கு அவசியம் என அறிவிக்கப்பட்டது.

மாணவர்களின் மதிய உணவு திட்டத்துக்கு ஆதார் கார்டு கட்டாயம் என அறிவிக்கப்பட்டது.

தற்போது இருசக்கரம் மற்றும் 4 சக்கர வாகனங்கள் பதிவு செய்வதற்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்படுகிறது.

English summary
Where and all Aadhar card is mandatary to get the offers from government.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X