For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பரபரப்பைக் கிளப்பிய பரிதி இளம்வழுதி எங்கே...???

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக அரசியலில் பரபரப்பைக் கிளப்பிய பரிதி இளம்வழுதி என்ன ஆனார், எங்கு போனார் என்பதே தெரியவில்லை. அதிரடியாக திமுகவிலிருந்து விலகி அதிமுகவில் சேர்ந்த அவர் சில காலம் பேசி வந்தார். அதன் பின்னர் ஆளையே காணவில்லை.

திமுகவில் அசைக்க முடியாத முக்கியப் புள்ளியாக விளங்கியவர் பரிதி இளம்வழுதி. பாரம்பரிய திமுககாரர். திமுகவின் முக்கிய சென்னை தளபதிகளில் பரிதியும் ஒருவர்.

இப்படிப்பட்ட பரிதி திடீரென திமுகவில் ஓரம் கட்டப்பட்டதால் வருத்தமடைந்து அங்கிருந்து வெளியேறி யாரும் எதிர்பாராத வகையில் அதிமுகவில் இணைந்தார்.

6 முறை எம்.எல்.ஏ

6 முறை எம்.எல்.ஏ

6 முறை சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் பரிதி. சட்டசபை துணை சபாயநாகராக இருந்துள்ளார். செய்தி ஒளிபரப்புத் துறை அமைச்சராக இருந்துள்ளார்.

28 வருடம் எம்.எல்.ஏவாக

28 வருடம் எம்.எல்.ஏவாக

1984ம் ஆண்டு முதல் 2011 வரை திமுக எம்.எல்.ஏவாக இருந்தவர் பரிதி. 25 வயதில் அதிமுகவின் சத்தியவாணி முத்துவை வீழ்த்தி சட்டசபைக்குள் நுழைந்து சாதனை படைத்தவர். அப்போது பெரம்பூர் தொகுதி எம்.எல்.ஏவாக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கருணாநிதியின் இந்திரஜித்

கருணாநிதியின் இந்திரஜித்

திமுக தலைவர் கருணாநிதியால், இந்திரஜித் என்றும், வீர அபிமன்யூ என்றும் புகழாரம் சூட்டப்பட்டவர்.

2011ல் வீழ்ச்சி

2011ல் வீழ்ச்சி

2011 சட்டசபைத் தேர்தலில் பரிதி எழும்பூர் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். தேமுதிக வேட்பாளர் நல்லதம்பி, அதிமுக கூட்டணி பலத்தால் பரிதியை வீழ்த்தினார்.

2013ல் அதிமுக பிரவேசம்

2013ல் அதிமுக பிரவேசம்

இந்த நிலையில்தான் கட்சித் தலைமைக்கும் பரிதிக்கும் இடையே அதிருப்தி ஏற்பட்டு, பூசல் வெடித்து கட்சியை விட்டு வெளியேறினார் பரிதி. 2013ம் ஆண்டு ஜூன் 28ம் தேதி அதிமுகவில் இணைந்தார் பரிதி. கட்சியின் செயற்குழு உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டார்.

அட்ரஸையே காணோம்

அட்ரஸையே காணோம்

அதிமுகவில் இணைந்த பரிதி சில கூட்டங்களிலும் கலந்து கொண்டார். பரபரப்பாகவும் பேசி வந்தார். திமுக தலைவர் கருணாநிதி, மு.க.ஸ்டாலின் ஆகியோரை கடுமையாக விமர்சித்துப் பேசி வந்தார். ஆனால் தற்போது பரிதியை எங்கும் காணவில்லை.

ஜெயலலிதாவுக்காகப் போராடவில்லை

ஜெயலலிதாவுக்காகப் போராடவில்லை

ஜெயலலிதா கைதாகி சிறைக்குச் சென்ற சமயத்தில் அதிமுகவினர் பல்வேறு வகையான பூஜைகள், நூதன விஷங்களில் ஈடுபட்டபோது பரிதி அதில் கலந்து கொள்ளவில்லை. அமைதியாக இருந்தார்.

பிரசாரத்திற்கும் போகவில்லை

பிரசாரத்திற்கும் போகவில்லை

அதேபோல ஸ்ரீரங்கம் இடைத் தேர்தல், இப்போது ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் பிரசாரம் என எதிலுமே அவர் கலந்து கொள்ளவில்லை.

வெப்சைட்டும் காலி

வெப்சைட்டும் காலி

அவரது பெயரில் செயல்பட்டு வந்த (http://www.parithi.in/) என்ற இணையதளமும் தற்போது செயல்படவில்லை. பரிதி அப்படி எங்கே போனார் என்பது தெரியவில்லை.

உடம்பு சரியில்லையா

உடம்பு சரியில்லையா

பரிதிக்கு உடல் நலம் சரியில்லையா அல்லது அவர் அதிமுகவில் அதிருப்தி அடைந்துள்ளாரா என்பது தெரியவில்லை. அந்த அளவுக்கு பெருத்த அமைதியில் உள்ளது பரிதி தரப்பு.

English summary
Suspiciously Parithi Ilamvazhuthi is missing in the ADMK camp. Parithi, a former DMK strongman in Chennai, switched over to the ADMK camp in the year 2013.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X