For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரிடம் உடல் தகுதி சான்றிதழை ஏன் கேட்கக் கூடாது.. ஹைகோர்ட் கேள்வி

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரிடம் உடல் தகுதி சான்றிதழை ஏன் கேட்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரிடம் உடல் தகுதி சான்றிதழை ஏன் கேட்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் உடல் தகுதிக்கான சான்றிதழைக் கேட்க வேண்டும் என்று பொள்ளாச்சி ஆனைமலையைச் சேர்ந்த சுப்பைய்யா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

Why do not ask physical fitness certificate from candidate who contest election, HC

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. நீதிபதி கிருபாகரன் தலைமையிலான அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. அப்போது, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வேட்புமனுவுடன் உடல்தகுதி சான்றிதழை ஏன் கேட்கக் கூடாது என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

மேலும், அரசுப் பணியில் உதவியாளர் பணியில் சேருபவர்களுக்கே உடல்தகுதிச் சான்றிதழ் கேட்கப்படுகிறது. ஆனால் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் இருந்து உடல் தகுதிச் சான்றிதழைக் கேட்க ஏன் தயக்கம் என்று மத்திய அரசு மற்றும் தேர்தல் ஆணையத்திடம் உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

வேட்பாளரிடம் உடல் தகுதிச் சான்றிதழ் கேட்பது குறித்து மத்திய அரசுதான் முடிவு செய்ய வேண்டும் என்றும் அதற்கான சட்டத்தை மத்திய அரசுதான் இயற்ற வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

English summary
Why do not ask physical fitness certificate from candidate who contest election, HC raised the question.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X