ஓபிஎஸ்ஸை நோக்கி எடப்பாடியை தலைதெறிக்க ஓட வைக்கும் தினகரனின் தெனாவெட்டு பேச்சுகள்!

தினகரனின் தெனாவெட்டு பேச்சுகளே முதல்வர் எடப்பாடி மற்றும் அவரது ஆதரவாளர்களை ஓபிஎஸ் அணி நோக்கி துரத்திவிட்டுள்ளதாம்.

By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல்வராக இருந்த ஓ. பன்னீர்செல்வத்துக்கு எந்த மாதிரியெல்லாம் டார்ச்சர் கொடுக்கப்பட்டதோ அதே துன்புறுத்தல்கள் தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் தினகரனால் நிகழ்கிறது. இதனால்தான் சசிகலா, தினகரன் இல்லாத அதிமுக என்ற முழக்கத்துடன் ஓபிஎஸ்ஸை நோக்கி எடப்பாடி தலைமையில் அதிமுகவின் தலைதெறிக்க தப்பி ஓட்டம் பிடிக்க தொடங்கியுள்ளனர்.

சசிகலா அதிமுக பொதுச்செயலராக இருந்தபோதும் டெல்லியின் கட்டுப்பாட்டில் முதல்வராக இருந்த ஓ. பன்னீர்செல்வம் இருந்தார். இதனால் சசிகலாவை நேரில் சந்தித்து சந்தித்து பேசகூட மறுத்துவந்தார் ஓபிஎஸ்.

ஒருமை பேச்சு

இது தொடர்பாக அப்போதைய முதல்வர் ஓபிஎஸ்ஸை போயஸ் கார்டனுக்கு அழைத்த டிடிவி தினகரன், என்ன பன்னீர்செல்வம், என்னை மறந்தாச்சா? டீ கடை பன்னீர்செல்வமா இருந்தவரை இந்த பதவியில் உட்கார வைத்ததே நான்தான்.. அதெல்லாம் ஞாபகம் இல்லையா இப்ப? என ஒருமையில்தான் பேசியிருக்கிறார் தினகரன். இதற்கடுத்து நடந்த தொடர் நிகழ்வுகளில் கார்டனில் ஓபிஎஸ் சட்டையை பிடித்து தாக்கப்பட்டார்.

கலகக் குரல்

இதனால் அவர் வெறுத்துபோய் டெல்லியின் உத்தரவுப்படி கலகக் குரலை எழுப்பினார். இதனைத் தொடர்ந்துதான் முதல்வராக சசிகலா முயற்சித்தார். ஆனால் அவர் சிறைவாசம் அனுப்பவிக்க நேரிட்டதால் முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி நியமிக்கப்பட்டார்.

ஒதுங்கிய எடப்பாடி

எடப்பாடி முதல்வரானது முதலே அவருக்கு பாதுகாவலர்களாக கொங்கு மண்டல எம்.எல்.ஏக்கள் இருந்து வருகின்றனர். ஓபிஎஸ்-க்கு நேர்ந்த கதி நமக்கும் வந்துவிடுமோ என்கிற அச்சத்தில்தான் தினகரனை அதிகம் சந்திக்காமல் கண்டுகொள்ளாமலேயே இருந்து வந்தார் எடப்பாடி. தினகரனின் எந்த உத்தரவையும் அவர் அமல்படுத்துவதில்லை.

எடப்பாடியுடனும் மல்லட்டுக்கட்டு

இதில் கடுப்பாகிப் போன தினகரன், ஓபிஎஸ்ஸை விமர்சித்தது போல, ஒருமையில் எடப்பாடியை பேசியிருக்கிறார். இந்த பேச்சுகள்தான் இனியும் இந்த குடும்பத்தை அனுமதித்தால் நமது ஆட்சி பறிபோவது உறுதியாகிவிடும்.. இதற்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும் என கங்கணம் கட்டிக் கொண்டு 'அண்ணன்' ஓபிஎஸ்ஸுடன் கைகோர்த்துள்ளாராம் எடப்பாடி பழனிச்சாமி.

 

 

குட்பை சொல்லுகிறார் தினகரன்?

இந்த இரு அணி வியூகங்களையும் தெரிந்ததால்தான், இரு தரப்பும் இணைந்து என்னை வெளியே போகச் சொன்னால் அரசியலுக்கு குட்பை சொல்லுவேன் என ஒரு பேட்டியில் தினகரன் கூறியிருந்தார். ஆம் இப்போது தினகரன் தானே அரசியலுக்கு குட்பை சொல்லும் நிலைமை ஓபிஎஸ்- எடப்பாடி அணிகள் விறுவிறுவென உருவாக்கி வருகின்றன என்பது அதிமுக வட்டாரங்களின் கருத்து.

English summary
Due to the Pressure from TTV Dinakaran now TamilNadu Chief Minsiter Edappadi and his supportes decided to join hands with Team OPS.
Please Wait while comments are loading...