For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்க்க வேண்டியது ஏன் தெரியுமா?

புதுக்கோட்டையில் உள்ள நெடுவாசல் பகுதியில் அமைந்துள்ள ஒரு ஹைட்ரோகார்பன் வயலை கர்நாடகாவை சேர்ந்த தனியார் நிறுவனம் ஜெம் லெபராட்டரிக்கு மத்திய அரசு ஏலத்தில் விற்றிருக்கிறது.

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: ஹைட்ரோகார்பன்கள் என்பவை ஆக்சிஜனின் உதவியோடு எரிந்து ஏராளமான சக்தியை உமிழும் எரிபொருட்கள். ஹைட்ரோகார்பன்களை எரிக்கும்போது வெளியாகும் வெப்பத்தைப் பயன்படுத்தி இயந்திரங்கள், மோட்டார்கள், மின் நிலையங்கள் இயங்குகிறது.

பெட்ரோலியம், நிலக்கரி, எரிவாயு, மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு, நாஃப்தா, ஷேல் எரிவாயு போன்றவற்றை எல்லாம்தான் மொத்தமாக ஹைட்ரோகார்பன்கள் என்றழைக்கிறோம்.

Why Hydrocarbon extraction project gets oppose in Tamilnadu?

நாடெங்கும் சிறு சிறு அளவுகளில் ஹைட்ரோகார்பன்கள் புதைந்துள்ளன. அதை எடுக்கும் பொறுப்பை அரசு தனியார் நிறுவனங்களத்திடம் ஏலத்திற்கு விடுகிறது.

இந்தியாவில் மொத்தம் 31 நிலப்பகுதிகள் இதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது. அசாம் மாநிலத்தில் 11 இடங்களும், ஆந்திர மாநிலத்தில் 4 இடங்களும், ராஜஸ்தானில் 2 இடங்களிலும், மகாராஷ்டிரா மாநிலத்தில் 4 இடங்களிலும் மற்றும் குஜராத் மாநிலத்தில் 5 இடங்கள், தமிழகத்தின் புதுக்கோட்டையில் உள்ள நெடுவாசல் ஆகியவையும், மற்றும் காரைக்கால் பகுதியும் இந்த பணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டையில் உள்ள நெடுவாசல் பகுதியில் அமைந்துள்ள ஒரு ஹைட்ரோகார்பன் வயலை கர்நாடகாவை சேர்ந்த தனியார் நிறுவனம் ஜெம் லெபராட்டரிக்கு மத்திய அரசு ஏலத்தில் விற்றிருக்கிறது.

இந்த திட்டத்தை இயற்கை ஆர்வலர்கள், விவசாயிகள் ஏன் எதிர்க்கிறார்கள் என்று தெரியுமா?

*விளைநிலம் பாழ்நிலம் ஆகும்.

*நிலத்தடி நீரும், நீர் நிலைகளும் அழிந்து போகும்.

*உணவுப் பாதுகாப்பு கேள்விக் குறியாகும்.

*செடி கொடிகள், மரம் மட்டைகள் மறைந்து போகும்.

*கால்நடைகள் பாதிப்புக்குள்ளாகும்.

*ஹைட்ரோகார்பன் நச்சுப் பொருட்களான பென்சீன், பெட்ரோலியம் போன்றவற்றை சுவாசிப்பதனால் அல்லது புற்றுநோய் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

*மேலும் சிறுநீரகங்கள், மூளை, நரம்பு மண்டலம் பாதிக்கப்படும்.

English summary
Why Hydrocarbon extraction project gets oppose in Tamilnadu from the civil socity?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X