ஜெ. சுகவீனத்திற்கு டெல்லியிலிருந்து வந்த போன் காரணமா.. போயஸ் கார்டனில் நேற்று இரவு நடந்தது என்ன?

By:

சென்னை: முதல்வர் ஜெயலலிதா போயஸ் கார்டனில் நேற்று இரவு மயக்கம் அடைந்ததாகவும் அதன் பின்னரே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

முதல்வர் ஜெயலலிதா காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் நேற்று இரவு அறிவித்தது. தற்போது ஜெயலலிதா குணமடைந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

டெல்லி போன்

ஜெயலலிதாவுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்ததால் ஒரு மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பதற்கான அனைத்து வசதிகளுமே போயஸ் கார்டனில் செய்யப்பட்டிருந்தன. இருப்பினும் நேற்று இரவு டெல்லியில் இருந்து சில தொலைபேசி அழைப்புகள் அடுத்தடுத்து வந்துள்ளன.

தீவிர ஆலோசனை

இந்த தொலைபேசி தகவல்களைக் கேட்ட பின்னர் சோர்வடைந்திருக்கிறார் ஜெயலலிதா. உடனே அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனைகள் மேற்கொண்டிருக்கிறார்.

மயக்கம்...

அப்போது மன அழுத்தத்துடன் பேசிக் கொண்டிருந்த ஜெயலலிதா சிறிது நேரத்திலேயே மயக்கமடைந்தாராம். இதையடுத்தே உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டாராம்.

நலம்

தற்போது முதல்வர் ஜெயலலிதா குணமடைந்துவிட்டதாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதையடுத்து அவர் விரைவில் வீடு திரும்புவார் என கூறப்படுகிறது.

English summary
A press release from Apollo Hospitals stated that Tamilnadu CM Jayalalithaa was stable and under observation.
Please Wait while comments are loading...

Videos