For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டாக்டர்கள் போராட்டதை போலீசார் ஏன் தடுக்கவில்லை? நீதிபதி கிருபாகரன் சரமாரி கேள்வி

சென்னையில் பயிற்சி டாக்டர்கள் போராட்டம் நடத்திய போது போலீசார் என்ன செய்துக் கொண்டிருந்தனர் என சென்னை ஹைகோர்ட் நீதிபதி கிருபாகரன் சரமாரியாக விளாசியுள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை பயிற்சி டாக்டர்கள் போராட்டம் நடத்திய போது போலீசார் என்ன செய்துக் கொண்டிருந்தனர் என சென்னை ஹைகோர்ட் நீதிபதி கிருபாகரன் சரமாரியாக விளாசியுள்ளார். டாக்டர்களின் போராட்டத்தை போலீசார் ஏன் தடுக்கவில்லை என்றும்
நீதிபதி கேள்வி எழுப்பினார்.

சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை டாக்டர்கள் அண்மையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

மருத்துவர்கள் போராட்டத்தால் சிகிச்சையளிக்க ஆள் இல்லாமல் 4 நோயாளிகள் உயரிழந்தனர். மருத்துவர்களின் போராட்டத்தால் சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

போலீசாரை விளாசிய நீதிபதி

போலீசாரை விளாசிய நீதிபதி

இந்நிலையில் பயிற்சி டாக்டர்கள் போராட்டம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன் போலீசாரை சரமாரியாக விளாசினார்.

போராட்டத்தை ஏன் தடுக்கவில்லை?

போராட்டத்தை ஏன் தடுக்கவில்லை?

பயிற்சி டாக்டர்கள் 2 மணி நேரமாக போராட்டம் நடத்தியுள்ளனர். அவர்ளின் போராட்டத்தை போலீசார் ஏன் தடுக்கவில்லை என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

போலீசார் எங்கிருந்தனர்?

போலீசார் எங்கிருந்தனர்?

இந்த போராட்டத்தின் போது, நோயாளிகள் பாதிக்கப்பட்டது குறித்த வீடியோ கடந்த 16, 17ம் தேதிகளில் வெளிவந்துள்ளது. போராட்டம் நடைபெற்ற அன்று மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை போலீஸ் உயரதிகாரிகள் எங்கிருந்தனர் என்றும் நீதிபதி கிருபாகரன் சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

இதைத்தொடர்ந்து போராட்டத்தின் போது நோயாளிகள் சிரமப்படவில்லை என அரசு தரப்பு வழக்கறிஞர் கூறினார். இதையடுத்து வழக்கு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

English summary
Chennai high court justice Kirubakaran questiones that Why Police officials did not stop Doctors protest. Where the police were when the protest happened.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X