For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜிஎஸ்டி.. திரையுலகிற்கே குரல் கொடுக்காத ரஜினியா அரசியலில் குரல் கொடுப்பார்? டி.ராஜேந்தர் பொளேர்

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: திரையுலகம் மீதான ஜிஎஸ்டி வரி விதிப்பை எதிர்த்து குரல் கொடுக்காத ரஜினியா, அரசியலில் மக்களுக்காக குரல் கொடுப்பார் என கேட்டுள்ளார் லட்சிய திமுக கட்சி தலைவரும், நடிகருமான டி.ராஜேந்தர்.

நாடு முழுக்க திரையரங்கங்கள் மீது 28 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது. இதுதவிர தமிழக அரசு கேளிக்கை வரி என்ற வகையில் 30 சதவீதம் வரி விதித்துள்ளது.

ஜிஎஸ்டியை மீறி தமிழக அரசு வரி வசூல் செய்ய முடியாது. எனவே உள்ளாட்சி அமைப்புகள் மூலம் தியேட்டர்கள் மீது கேளிக்கை வரி சுமத்தும் வகையில் சட்டத் திருத்தம் செய்துள்ளது தமிழக அரசு.

சினிமா மீது வரி

சினிமா மீது வரி

இந்த செயல்பாடுகளால் தமிழக திரையரங்குகள் மீது மொத்தம் 58 சதவீத வரி விழுகிறது. இதனால் தியேட்டர்களையும், சினிமாவையும் நம்பியுள்ள பல ஆயிரம் பேர் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

கமல் முதலில் எதிர்ப்பு

கமல் முதலில் எதிர்ப்பு

ஜிஎஸ்டி வரி விதிப்பு குறித்து சில வாரங்கள் முன்பே நடிகர் கமல்ஹாசன் ஆதங்கம் வெளிப்படுத்தினார். தமிழ் திரையுலகில் இருந்து வெளியான முதல் வாய்ஸ் அவருடையது. வரி விகிதம் இப்படி இருந்தால் நான் திரையுலகை விட்டே வெளியேறுவதை தவிர வேறு வழியில்லை என்றும் அவர் கூறினார். அனைத்து மாநில மொழி படங்களுக்கும் ஒரே மாதிரி வரி என்பது நடைமுறைக்குக்கு மாறானது என்றார் கமல்.

முதல்வருடன் சந்திப்பு

முதல்வருடன் சந்திப்பு

இந்த நிலையில், தமிழ்நாடு திரைப்பட வர்த்தக சபை தலைவர் அபிராமி ராமநாதன் சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர் வேலுமணி ஆகியோரை சந்தித்து வரி குறைக்க கோரிக்கை மனு வழங்கினார். நிருபர்களிடம் பேசிய ராமநாதன் கூறுகையில், திரையரங்குகள் மீது மாநில அரசு கேளிக்கை வரியாக 30 சதவீதம் நிர்ணயித்துள்ளது. வாட் வரி 28 சதவீதம். எனவே 58 சதவீத வரியை செலுத்துவது மிகவும் கஷ்டம் என முதல்வரிடம் தெரிவித்தோம் என தெரிவித்தார்.

குரல் கொடுப்பாரா?

குரல் கொடுப்பாரா?

இதுகுறித்து டி.ராஜேந்தர் அளித்த பேட்டியில் கூறியதாவது: ஜிஎஸ்டி வரி குறித்து ரஜினி மவுனம் காக்கிறார். தமிழ் திரையுலகத்தை ஜிஎஸ்டி வரி பாதிக்கும். தான் சார்ந்த திரையுலகிற்கே குரல் கொடுக்காத ரஜினியா அரசியலுக்கு வந்து மக்களுக்காக குரல் கொடுப்பார்.

மோடிக்கு டாக்டர் பட்டம்

மோடிக்கு டாக்டர் பட்டம்

மக்களைச் சிரமப்படுத்துவதில் ஜி.எஸ்.டி.யில் பி.ஹெச்.டி. பெற்றிருக்கிறார் மோடி. மக்களுக்கு சேவை செய்ய அரசியல்வாதிகள் இருக்கிறார்களே, பிறகு திரையுலகம் மீது எதற்காக சேவை வரி விதிக்கப்படுகிறது என்று கேள்வி எழுப்பினார் டி.ராஜேந்தர்.

English summary
Why Rajinikanth does not raise voice against GST on Cinema, asks T.Rajender in a interview.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X