சென்னையின் பல இடங்களில் கன மழை.. வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையின் பல இடங்களில் கன மழை பெய்துள்ளது. ஆனால் மழை வெகு நேரம் நீடிக்கவில்லை.

சென்னை உட்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே வெப்பம் அதிகரித்தபடி இருந்தது. சென்னையில் இன்று மதியம் அனல் காற்று வீசியது. இந்த நிலையில் இரவு 10 மணியளவில் தென் சென்னை உட்பட பல பகுதிகளில் மழை கொட்டியது.

Widespread rain and thuderstrom across Chennai

தாம்பரம், துரைப்பாக்கம், குரோம்பேட்டை, பல்லாவரம், ஓ.எம்.ஆர், திருவான்மியூர், பாலவாக்கம், தரமணி உள்ளிட்ட பல பகுதிகளில் மழை வேகமாக கொட்டியது. இருப்பினும் ஐந்து முதல் பத்து நிமிடங்களுக்குள் மழை நின்றுவிட்டது.

இதனால் வெப்பம் குறைந்து ஓரளவுக்கு நிம்மதி பெருமூச்சுவிட்டனர் சென்னைவாசிகள். அதேநேரம், சில பகுதிகளில் மின்வெட்டு ஏற்பட்டு அதனால் தூக்கம் தொலைத்த சிட்டிசன்களையும் பார்க்க முடிந்தது.

Chennai Rain Creates Record On 7CM In An Hour-Oneindia Tamil

ஆயிரத்தில் ஏன்? லட்சத்தில் ஒருவரை தேர்ந்தெடுங்கள், தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்!

English summary
Widespread rain and thuderstrom across Chennai chills the city amidst summer.
Please Wait while comments are loading...
வேலைவாய்ப்புகள்