For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாமக தலைமையை ஏற்றால் பாஜகவுடன் கூட்டணி தொடரும்: ராமதாஸ் பேட்டி

By Veera Kumar
Google Oneindia Tamil News

தர்மபுரி: பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் தர்மபுரியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:

15 ஆண்டுகளுக்கு பின் பா.ம.க. தமிழகம் முழுவதும் வளர்ந்துள்ளது. திடீரென ஆரம்பிக்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் ஆட்சியை பிடித்தது. புதுச்சேரியில் கட்சி தொடங்கப்பட்ட 2 மாதத்தில் என்.ஆர். காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. வருகிற சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் பா.ம.க. ஆட்சி அமையும். 2016 சட்டமன்ற தேர்தலில் பா.ம.க. தலைமையில் மாற்று அணி போட்டியிடும். எங்களது தலைமையை ஏற்றால் தமிழகத்தில் பாஜகவுடன் கூட்டணி நீடிக்கும்.

Will continue in the NDA alliance if PMK annonce as the leader

கர்நாடகாவை சேர்ந்த தலைவர்கள், அங்கு மக்களி டம் தங்களது செல்வாக்கு சரியும் போதெல்லாம் ஒகேனக்கல் எங்களுக்கு சொந்தம் எனக்கூறி வரு கின்றனர். ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் முழுவீச்சில் நடை பெறும் போது இந்த கருத்தை கூறி எடியூரப்பா வெற்றி பெற்றார். தற்போது கர்நாடக முதல்வர் சித்தராமையா ஒகேனக்கல் எங்களுக்கு சொந்தம் என்று கூறி வருகிறார். பொறுப்புள்ள பதவியில் இருப்பவர்கள் இது போன்று பேசுவதை தவிர்க்க வேண்டும். நாங்கள் பெங்களூர் மற்றும் மைசூர் எங்களுக்கு சொந்தம் என்று கூறினால் என்னவாகும்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடி போதை பொருள் தீமை குறித்து விரிவாக பேசியுள்ளார். இது வரவேற் கத்தக்கது. முதலில் தேசிய அளவில் மது விலக்கு கொள்கை கொண்டு வர வேண்டும். போதை பொருட்கள் இளைஞர்களை தவறான பாதைக்கே அழைத்து செல்லும். எனவே நரேந்திர மோடி இதை பேச்சு அளவில் நிறுத்திவிடாமல் செயல்படுத்த வேண்டும்.

தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆட்சியில் தான் மது கொண்டுவரப்பட்டது. நாங்கள் வருகிற சட்டமன்ற தேர்தலில் பிரதான பிரச்சினையாக மதுவை முன்வைப்போம். தர்மபுரி, மொரப்பூர் ரயில் திட்டத்தை நிறைவேற்ற டாக்டர் அன்புமணி முயற்சி செய்து வருகிறார். ரயில்வே அமைச்சர் சுரேஷ் பாபு, அவரது நண்பர். அதனால் அந்த திட்டத்தை கண்டிப்பாக நிறைவேற்றுவார்.

ரெயில்வே போட்டி தேர்வில் சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சமீபத்தில் பதவி இழந்த முதல்வர் யார்? என்று கேள்வி கேட்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் இந்தியா முழுவதும் தமிழ்நாட்டின் மானம் பறிபோகிறது. ஆனால் அ.தி.மு.க.வினர் அவரை மக்கள் முதல்வர் என பேசிவருகிறார்கள். ஊழலில் சிறை தண்டனை பெற்றபின்பும் ஜெயலலிதா இன்னும் திருந்தவில்லை. இன்றும் சத்துணவு வேலைக்கு ரூ. 2 லட்சம், ரூ. 3 லட்சம் என பேரம் பேசுகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

English summary
PMK will continue in the NDA alliance if that alliance will come under PMK, says party founder Ramadoss.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X