பாஜகவில் சேருவீர்களா? வழக்கம் போல நோ கமெண்ட்ஸ் சொன்ன ரஜினிகாந்த்

By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பாரதிய ஜனதா கட்சியில் சேருவீர்களா? என்ற கேள்விக்கு வழக்கம் போல நோ கமெண்ட்ஸ் என்றே பதிலளித்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.

நடிகர் ரஜினிகாந்த் கடந்த 3 நாட்களாக சென்னையில் ரசிகர்களை சந்தித்து வருகிறார். இச்சந்திப்பின் தொடக்கத்தில் பேசிய ரஜினிகாந்த் தாம் அரசியலுக்கு வர உள்ளதாக கூறியிருந்தார். அத்துடன் திமுக, தமாகா, பாஜகவை மறைமுகமாக சாடினார்.

பாஜக அழைப்பு

இதற்கு பதிலளித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், நாங்கள் ரஜினியை அரசியல் ஆதாயத்துக்காக சந்திக்கவில்லை என கூறியிருந்தார். இதனிடையே ரஜினிகாந்த் பாஜகவில் இணைய வேண்டும் என்று மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியிருந்தார்.

ஆண்டவன் முடிவு

அத்துடன் தாம் அரசியலில் இணைவது தொடர்பாக ஆண்டவன்தான் முடிவு செய்வார் என்றும் ரஜினிகாந்த் கூறியிருந்தார். இந்த நிலையில் இன்று 3-வது நாளாக ரசிகர்களை ரஜினிகாந்த் சந்தித்தார்.

நோ கமெண்ட்ஸ்

இச்சந்திப்புக்கு வந்த ரஜினிகாந்திடம், பாஜகவில் சேருவீர்களா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு வழக்கும் போல 'நோ கமெண்ட்ஸ்' என்று மட்டுமே பதிலளித்தார் ரஜினிகாந்த்.

எப்போதும் தப்பிப்பது வழக்கம்

ரஜினிகாந்த் கடந்த காலங்களில் அரசியல் தொடர்பான பல கேள்விகளுக்கு 'நோ கமெண்ட்ஸ்" என்ற ஒற்றை வார்த்தையை மட்டும் சொல்லிவிட்டு தப்பிப்பது வழக்கம். இப்போதும் கூட அதே பாணியில்தான் பதில் சொல்லியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

English summary
Superstar Rajinikanth neither refused nor confirmed his willingness to join the BJP if he entered electoral politics.
Please Wait while comments are loading...