For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உப்புச்சப்பில்லாமல் போனதா சமச்சீர் கல்வி? – மெட்ரிக் பள்ளிகள் சிபிஎஸ்இ-க்கு மாறும் அபாயம்!

Google Oneindia Tamil News

சென்னை: சமச்சீர்க்கல்வியை தமிழக அரசு முறையாக அமல்படுத்தத் தவறியதால் மெட்ரிக் பள்ளிகள் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்துக்கு மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கல்வியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

தமிழகத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு முந்தைய கணக்கீட்டின் படி 8000 தனியார் பள்ளிகள் இருந்தன. இதில் 4800 நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகள் 3500 மெட்ரிக் 41 ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் 159 சி.பி.எஸ்.இ பள்ளிகள் அடங்கும்.தற்போது பெரும்பாலான மெட்ரிக் மற்றும் பிரைமரி பள்ளிகள் மத்திய அரசின் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்துக்கு மாறி வருகின்றன.

Will Samacheer kalvi doesn’t work properly?

இதனால் 35 ஆயிரம் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பெரும் அளவில் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.அதேநேரம் தனியார் மெட்ரிக் பள்ளிகள் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்துக்கு செல்ல என்.ஓ.சி. என்ற தடையில்லா சான்று தரக்கூடாது என பெற்றோர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

உச்சநீதிமன்ற உத்தரவு மற்றும் கல்வியாளர்களின் பெரும் போராட்டங்களுக்குப் பின் சமச்சீர்க்கல்வி அமலானது. ஆனால் சமச்சீர்க்கல்விக்கு துவக்கத்திலேயே அரசு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் வேண்டா வெறுப்பாக இந்தத் திட்டம் பெயரளவில் அமலாகிறதா என்ற சந்தேகம் கல்வியாளர்களிடம் எழுந்துள்ளது.

சமச்சீர்க்கல்வியை அரசு வேண்டா வெறுப்பாக பெயரளவில் செயல்படுத்துகிறது. சமச்சீர்க்கல்வி என்ற பெயரில் அமலானாலும் உண்மையான பாகுபாடற்ற தரம் உயர்ந்த பாடத்திட்டத்தை அரசு செயல்படுத்தவில்லை.

வெறும் பொதுத் தேர்வும், பொதுப் பாடத்திட்டமும் தான் அமலாகியுள்ளது. இன்னும் பல இயக்குனரகங்கள் செயல்படுகின்றன. இந்தப் பாடத்திட்டத்தில் குறை இருந்தால் தரம் உயர்த்திக் கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் அரசு அலட்சியமாக உள்ளது.

அரசுப் பள்ளிகளில் தரமான ஆசிரியர்கள் இருந்தாலும் அவர்களுக்கு உயர் அகாரிகள் அரசியல்வாதிகள் தரப்பில் குறுக்கீடுகள் உள்ளன என்று கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

English summary
Government planned to CBSC syllabus in Metric school due to wrong execution of Samacheer Kalvi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X