For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திடீர் திருப்பம்... காங்கிரஸ் ஆதரவைப் பெற களம் குதித்த சசிகலா குரூப்..!

காங்கிரஸ் கட்சியின் 8 எம்.எல்.ஏக்களின் ஆதரவைப் பெற சசிகலா குரூப் முயன்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Google Oneindia Tamil News

சென்னை: சசிகலா தரப்பில் போதிய எம்.எல்.ஏக்கள் இல்லாத நிலை உறுதியாகி வருகிறது. காங்கிரஸ் தரப்பின் ஆதரவைப் பெற சசிகலா தரப்பு தீவிரமாக முயன்று வருவதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

காங்கிரஸ் கட்சிக்கு சட்டசபையில் 8 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களின் ஆதரவைப் பெற்று தனது நிலையை ஸ்திரப்படுத்திக் கொள்ள சசிகலா குரூப் தீவிரமாக முயன்று வருவதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த முயற்சி பலிக்குமா என்பதுதான் தெரியவில்லை.

முன்னதாக முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் அங்கு போய் சசிகலாவை சந்தித்துப் பேசியது நினைவிருக்கலாம்.

திருநாவுக்கரசர்

திருநாவுக்கரசர்

மேலும் அதிமுக அரசுக்கு ஆபத்து வந்தால் காப்பாற்றுவோம் என்றும் அப்போது திருநாவுக்கரசர் கூறியிருந்தார் என்பதும் நினைவிருக்கலாம். பாஜக தமிழகத்தில் மறைமுகமாக காலூன்று முயன்று வருவதாகவும் அவர் குற்றம் சாட்டி வருகிறார்.

சசிகலாவுக்கு மறைமுக ஆதரவு

சசிகலாவுக்கு மறைமுக ஆதரவு

எனவே ஓ.பன்னீர் செல்வம் மீண்டும் ஆட்சியில் அமைவதை திருநாவுக்கரசர் விரும்புவார் என்று கூற முடியாது. காரணம், பன்னீர் செல்வத்துக்கு பாஜக மறைமுகமாக ஆதரவு தருவதாக பரவலாக பேச்சு உள்ளது என்பதால். எனவே சசிகலா ஆட்சியமைக்க திருநாவுக்கரசர் மறைமுகமாக உதவலாம் என்றும் வலுவாக நம்பப்படுகிறது.

பலவீன நிலை

பலவீன நிலை

தற்போது சசிகலா தரப்பு படு பலவீனமாகி வருகிறது. ரிசார்ட்டுக்குக் கொண்டு போய் வைத்துள்ள எம்.எல்.ஏக்களில் பலரும் ஓ.பன்னீர் செல்வத்தையே ஆதரிப்பார்கள் என்று கருதப்படுகிறது. எனவே பாதுகாப்புக்காக காங்கிரஸ் எம்.எல்.ஏக்களையும் வளைக்க அதிமுக தரப்பு களம் குதித்துள்ளதாக கூறப்படுகிறது.

மொத்தம் 136

மொத்தம் 136

தற்போது அதிமுக கூட்டணியில் மொத்தம் 136 பேர் உள்ளனர். இதில் அதிமுக - 133 கொங்கு இளைஞர் பேரவை-1 மக்கள் ஜனநாயக கட்சி- 1 முக்குலத்தோர் புலிப் படை-1 ஜெயலலிதா நீங்கலாக மிச்சமுள்ள அதிமுக எம்எல்ஏக்கள் எண்ணிக்கை- 135. தற்போது சசிகலா கட்டுப்பாட்டில் உள்ளதாக கூறப்படும் அதிமுக எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 129. முதல்வர் ஓ பன்னீர்செல்வம் உள்பட அவருக்கு ஆதரவாக உள்ள எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 6.

117 பேர் இல்லை?

117 பேர் இல்லை?

சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க தேவையான எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 117. ஆனால் சசிகலா தரப்பிடம் இந்த பெரும்பான்மை பலம் நிச்சயம் இல்லை என்று உறுதியாக நம்பப்படுகிறது. மொத்தத்தில் சசிகலாவின் கனவு நிராசையாகும் என்ற நிலை வலுத்து வருகிறது.

English summary
Sources in ADMK say that some attempts are being made to woo Congress MLAs to back Sasikala to form the government. TN Congress has 8 MLAs in the state assembly.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X