For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெ.மறைந்த 72 நாட்களில் சசிகலா... அடுத்த 72வது நாளில் தினகரன்... சோ நெக்ஸ்ட் விக்கெட் விவேக்?

ஜெயலலிதா மறைந்த 72 நாள்களில் சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா கைது செய்யப்பட்டுள்ளதை போல் சசிகலா கைதுக்கு அடுத்த 72 நாள்களில் தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் அளித்த வழக்கில் தினகரன் கைது செய்யப்பட்டுள்ளா

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: ஜெயலலிதா மறைந்த 72 நாள்களில் சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா கைது செய்யப்பட்டுள்ளதை போல் சசிகலா கைதுக்கு அடுத்த 72 நாள்களில் தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் அளித்த வழக்கில் தினகரன் கைது செய்யப்பட்டுள்ளார். அடுத்தது யாராக இருக்கும் என்று கேள்வி எழுந்துள்ளது.

ஜெ.மரணத்துக்கு பின்னர் அவரால் அடித்து துரத்தப்பட்ட அனைத்து உறவினர்களையும் அழைத்துக் கொண்டு வந்து போயஸ் தோட்டத்தில் குடியேறினார் சசி. அப்போது அக்காவே போய்விட்டார் எனக்கு பதவி ஒன்றுதான் கேடா என்று ஆர்ப்பரித்த சசிகலா, கடைசியில் பொதுச்செயலர் பதவியையே ஏற்றுக் கொள்வது போல் அதிமுகவையே அபகரித்துவிட்டார்.

முழுசாக ஜெ.வாக மாறிய சசி

முழுசாக ஜெ.வாக மாறிய சசி

அதுதான் தாமதம். நடை, உடை, பாவனை என அனைத்திலும் போலி ஆவணங்கள் தயாரிப்பது போல் ஜெயலலிதாவின் போலியாகவே மாறினார். கையெழுத்து முதற்கொண்டு அவரை பின்பற்றினார். இதனால் அவரை மக்கள் கரித்து கொட்டாத நாளே இல்லை. அதைவிட பொதுச் செயலாளர் பதவியை நீங்கள் தொந்தரவு செய்வதனால் ஏற்றுக் கொள்கிறேன் என்பதை போல் முகத்தை வைத்து கொண்டு என்னா நடிப்பு. அப்பப்பா... ஆட்சியையும் கபளீகரம் செய்ய காய்களை நகர்த்தி வந்தார்.

சொத்து குவிப்பு வழக்கில்..

சொத்து குவிப்பு வழக்கில்..

சசிகலா எனும் நான் என்று சொல்வது போன்று அடிக்கடி கண்ட கனவை நனவாக்க நடவடிக்கைகளை மேற்கொண்ட போது சொத்துக் குவிப்பு வழக்கில் நீதிபதி குன்ஹா வழங்கிய தீர்ப்பை உச்ச நீதிமன்ற்ம உறுதி செய்தது. அதன் முடிவில் சசிகலா, அண்ணி இளவரசி, அக்காள் மகன் சுதாகரன் உள்ளிட்டோர் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டனர். அதன் பின்னர் புலிக்கு பிறந்தது பூனை அல்ல என்பதை நிரூபிப்பது போல் சித்தியின் பாணியில் கட்சியையும், ஆட்சியையும் கைப்பற்ற தினகரன் முடிவு செய்தார். அதன் விளைவு இரட்டை இலை சின்னத்துக்கு லஞ்சம் பெற்ற வழக்கில் கைது செய்யப்பட்டார். தற்போது வசமாக சிக்கியுள்ளார்.

72 நாளில்...

72 நாளில்...

இந்த கைது நடவடிக்கைகளை கூர்ந்து கவனித்தோமேயானால் ஒன்று புலப்படுகிறது. ஜெயலலிதா மறைந்த 72 நாள்களில் அதாவது பிப்ரவரி 14-ஆம் தேதி சசிகலா கைது செய்யப்பட்டார். இவர் சிறை சென்ற 72 நாள்களில் டிடிவி தினகரன் கடந்த 26-ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.

அடுத்தது யாரு?

அடுத்தது யாரு?

அடுத்த 72 நாள்களில் அதாவது ஜூலை முதல் வாரத்தில் யார் கைது செய்யப்படுவார்கள் என்று மக்கள் கணக்கு போட்டு கொண்டு வருகின்றனர். அதன்படி சசிகலாவின் அண்ணன் மகன் விவேக் ஜெயராமனாக இருக்கலாம் என்று பேச்சு அடிப்படுகிறது.

தினகரன் கோஷ்டியின் மிகப் பெரிய ஆயுதங்களாக இருக்கும் ஜெயா டிவி, நமது எம்ஜிஆர் பத்திரிகையை நிர்வகிக்கும் இவர் இளவரசியின் மகன் ஆவார். இவரது ஜாஸ் சினிமாஸில் வருமான வரித்துறையினரை ஏவிவிட ஓபிஎஸ் கோஷ்டியினர் திட்டமிட்டு வருகின்றனராம்.

English summary
From Jayalalitha's death, after 72 days Sasikala was arrested in DA case. TTv Dinakaran was arrested in bribery case from 72 days after Sasikala's arrest. Who will be the next?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X