For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இன்று முத்த தினம்.. தெரியுமா?

Google Oneindia Tamil News

சென்னை: இன்று உலக முத்த தினம். உலகம் முழுவதும் பல நாடுகளிலும் இன்று முத்தச் சத்தம் அமோகமாக இருக்கிறது. மேலை நாடுகளில் வழக்கம் போல உற்சாக முத்தங்களுடன் இந்த முத்த தினத்தை காதலர்களும், மற்றவர்களும் கொண்டாடி வருகின்றனர்.

காதலர் தினம், தந்தையர் தினம், அன்னையர் தினம் போல மேற்கத்திய நாடுகளில் பிரபலமானது இந்த சர்வதேச முத்த தினம். அன்பின் வெளிப்பாடுதான் முத்தம்.

கொடுப்பவரையும், பெறுபவரையும் பொறுத்து இதற்கு அர்த்தம் மாறும். அன்பையும், பாசத்தையும், நெருக்கத்தையும் அதிகரிக்க உதவுவது இந்த முத்தம். இதை வலியுறுத்தியே இந்த முத்த தினம் கொண்டாடுகிறார்களாம்.

World kiss day today

அதேசமயம், காதலர் தினம் போல இந்த முத்த தினம் இன்னும் வணிக மயமாகவில்லை. மாறாக உண்மையான அன்புப் பரிமாற்ற தினமாக இருக்கிறது. அதுவரை ஆறுதலான விஷயம்தான்.

முதல் முத்தம் எத்தனை பேருக்கு நினைவிருக்கும்.. கண்டிப்பாக அதைப் பெற்ற அத்தனை பேருக்கும் அது மறக்க முடியாத ஒன்று. முத்தத்திற்கு அப்படி ஒரு சக்தி.

இந்த நாளில் அந்த முத்தத்தை நினைத்துக் கொள்ளுங்கள்.. காதலர்களுக்கு மட்டும்தானா முத்தம் சொந்தம்.. இல்லை இல்லை.. பிள்ளைக்குத் தாய் தந்தை கொடுக்கும் முத்தம்.. அதற்கு நிகர் ஏது..!

இந்த முத்த நாளில்... ஒரு சாதனை முத்தத்தைப் பார்த்து விட்டு வருவோமா.. உலகிலேயே மிக நீண்ட முத்தம் என்ற பெருமை, தாய்லாந்தைச் சேர்ந்த எக்கச்சாய் திரினராத், லக்சனா திரினராத் ஜோடியிடம் உள்ளது. இந்த ஜோடி 2013ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினத்தன்று தொடர்ந்து இடைவிடாமல் 58 மணி நேரம் 35 நிமிடம் 58 விநாடிகளுக்கு முத்த நிலையில் இருந்து.. கிஸ்ஸில் ஒரு கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்.

English summary
The world kiss day is being celebrated today world wide.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X