For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பொங்கல் திருவிழா விடுமுறை கட்டாயமில்லை.. இது இனத்தின் மீதான எதிர்ப்பு.. பிரபஞ்சன் கண்டனம்

பொங்கல் திருவிழா விடுமுறை கட்டாயமில்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளதற்கு சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பிரபஞ்சன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது ஓர் இனத்தின் மீதான தாக்குதல் என்றும் அவர் கூ

Google Oneindia Tamil News

சென்னை: பொங்கல் திருவிழாவிற்கு விடுமுறை கட்டாயமில்லை என்று மத்திய அரசு நேற்று அறிவித்தது. இதற்கு தமிழகத்தின் மூத்த எழுத்தாளரான பிரபஞ்சன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஒன்இந்தியாவிடம் சாகித்திய அகடாமி விருது பெற்ற எழுத்தாளர் பிரபஞ்சன் கூறியதாவது:

Writer Prabanjan condemns removal of Pongal as central holiday

பொங்கல் பண்டிகை என்பது ஒரு இனத்தின் அறுவடைத் திருவிழாவாக கருதப்படும் ஒரு பண்பாட்டு விழா. அதோடு உழவர்களும் உழவர்கள் சார்ந்த உயிரினங்களான மாடுகள் மற்றும் அது சார்ந்த கருவிகள், அனைவருக்குமான அன்பும் நன்றியும் பாராட்டும் விழாவாகவும், ஓர் இனம், பன்னூறு ஆண்டுகளாக கொண்டாடி வருகிறது. இந்த விழாவிற்கு விருப்ப விடுமுறை என்று சொல்வது ஒரு இனத்திற்கு எதிரான கருத்ததாக நான் பார்க்கிறேன்.

இது தமிழர்களின் அடிப்படை மற்றும் பண்பாட்டு திருவிழாவாக உள்ளதால், அனைவருக்குமான விடுமுறை நாளாக கருதப்பட வேண்டும். இது ஒரு குறிப்பிட்ட மதத் தலைவரின் விழாவாகவோ, ஒரு குறிப்பிட்ட மதத்தின் அல்லது அந்த மதத்தை ஏற்படுத்திய மனிதரின் விழாவாகவோ கருதி விருப்ப விடுமுறை தருகின்ற செயல்பாடு பொங்கலுக்குபொருந்தாது என்று பிரபஞ்சன் கூறியுள்ளார்.

பொங்கலுக்கு விடுமுறை கட்டாயம் இல்லை என்பது ஏற்கனவே நடைமுறையில் இருக்கிறது என்றால் இப்போது பாஜக அரசு அறிவிப்பதற்கான உள்நோக்கம் என்ன என்பதை பொதுமக்கள், நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

English summary
Writer Prabanjan condemned removal of Pongal holiday from compulsory holidays list to restricted holidays list.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X