For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காரமடை உதவி பேராசிரியை ரம்யா படுகொலை வழக்கு... குற்றவாளி மகேசுக்கு தூக்கு!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

கோவை : கோவை அருகே காரமடையில் உதவி பேராசிரியை ரம்யா பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளி மகேசுக்கு தூக்கு தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

கோவை மாவட்டம் காரமடையில் உள்ள பாலாஜி நகரைச் சேர்ந்தவர் தர்மராஜ். நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மாலதி,48. இந்த தம்பதிக்கு 2 மகள்கள். மூத்த மகளான ரம்யா, 24 கோவையை அடுத்த கிணத்துக்கடவில் தனியார் பொறியியல் கல்லூரியில் உதவி பேராசிரியையாக வேலைபார்த்து வந்தார்.

Youth Get Death Sentence In Coimabatore Woman Rape Case

மொகரம் பண்டிகை விடுமுறைக்காக வீட்டுக்கு வந்த ரம்யா அவருடைய வீட்டில் 3.11.2014ம் தேதி கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தார். இவரின் 3 பவுன் தங்கசெயின், கால்பவுன் தங்க தோடு மற்றும் லேப்டாப் திருடப்பட்டு இருந்தது. அவரது தாயார் வீட்டின் மற்றொரு அறையில் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தார்.

இச்சம்பவம் தொடர்பாக காரமடை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து தென்காசியை சேர்ந்த மகேஷ் என்பவரை கைது செய்தனர். விசாரணையில் தென்காசியை சேர்ந்த மகேஷ் என்பவர் கோவை பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் கட்டிட மேஸ்திரியாக பணியாற்றி வந்துள்ளார் என்பது தெரியவந்தது.

சம்பவத்தன்று குடிப்போதையில் ஆசிரியர் காலனி பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த பொழுது பேராசிரியர் ரம்யா அவ்வழியாக வீட்டிற்கு சென்றுள்ளார்.அப்போது அவரது நகையை திருட வேண்டும் என்பதற்காக அவரை பின்தொடர்ந்து சென்று வீட்டின் உள்ளே நுழைந்து ரம்யாவை தாக்கியுள்ளார், தடுக்க வந்த அவரது தாயார் மாலினியையும் தாக்கியுள்ளர். இதில் சம்பவ இடத்திலேயே ரம்யா தலையில் அடிப்பட்டு கொலை செய்யப்பட்டார் என தெரியவந்தது.

மகேஷ் மீது 5 பிரிவுகளில் குற்றச்சாட்டு பதிவு செய்து கோவை மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதுதவிர அவர் மீது பல கொலை கொள்ளை வழக்குகள் இருந்ததால் அவர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், பேராசிரியை கொலை வழக்கு தொடர்பான விசாரணை முடிவடைந்து, மகேஷ் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டது.

கோவை மகளிர் நீதிமன்றத்தில் இன்று இறுதி வாதம் நிறைவுப்பெற்று கொலையாளி ரமேஷ் குற்றவாளி என உறுதி செய்யப்படுகிறது என நீதிபதி ராஜா அறிவித்தார். மேலும் ரமேஷ் மீது கொலைமுயற்சி,திருட்டு என ஐந்து பிரிவுகளின் கீழ் இன்று தீர்ப்பு வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். மாலையில் தீர்ப்பை வாசித்த நீதிபதி குற்றவாளி மகேசுக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

நீதிபதி தனது தீர்ப்பில், பேராசிரியை ரம்யாவை கொலை செய்த குற்றத்திற்காக தூக்கு தண்டனையும் பாலியல் குற்றத்திற்காக ஆயுள் தண்டனையும், அத்துமீறி உள்ளே நுழைந்ததற்காக 6 வருடமும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட மகேஷ் மீது நெல்லையில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. அங்கு பாலியல் புகாரில் கைதாகி பின்னர் குற்றச்சாட்டு நிருபிக்கப்படாததால் விடுதலை செய்யப்பட்டான். தற்போது குண்டர் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டுள்ள மகேசுக்கு தூக்கு தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.

English summary
A youth name Mahesh convicted for raping and killing a woman assistant professor in Karamadai in the district in November 2014.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X