எடப்பாடியில் வாலிபர் கொலை... கள்ளக்காதலி உள்பட 3 பேர் கைது

Subscribe to Oneindia Tamil

சேலம்: சேலம் மாவட்டம் எடப்பாடியில் கள்ளக்காதலை இனியும் தொடர முடியாது என்று கூறியும் விடாமல் தொல்லை கொடுத்ததாக இளைஞர் ஒருவரை கொலை செய்த வழக்கில் கள்ளக்காதலி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

எடப்பாடி அருகிலுள்ள எலவம்பாளையத்தைச் சேர்ந்தவர் செல்வம் (32). விசைத்தறி நெசவுத் தொழிலாளியான இவருக்கு திருமணம் ஆகவில்லை. அதே ஊரைச் சேர்ந்தவர் கோவிந்தன். இவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.

இதனால் செல்வத்துக்கும், பிரபாவுக்கும், நான்கு ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. பிரபாவின் வீட்டுச் செலவுக்கு செல்வம் பொருள் உதவியும் செய்து வந்துள்ளார்.

மர்மசாவு

கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று செல்வம் மகுடஞ்சாவடி அருகிலுள்ள மாங்குட்டப்பட்டி ஏரியில், பொந்தனூர் பிரிவு சாலை அருகில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

3 பேர் கைது

இதுகுறித்து மகுடஞ்சாவடி போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். இதுதொடர்பாக செல்வத்தின் கள்ளகாதலி பிரபா, ஓமலூர் அருகே உள்ள கருத்தானூரை சேர்ந்த குமரேசன் (28), சின்னப்பம்பட்டியை சேர்ந்த குமார் (22) ஆகிய மூன்று பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

விசாரணை

அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், பிரபாவின் மகன், மகள் இருவரும் பெரியவர்கள் ஆகிவிட்டனர். இனிமேல் இருவரிடையே உள்ள கள்ளத்தொடர்பை துண்டித்துவிடலாம் என்று கூறியுள்ளார். எனினும், செல்வம் அதை கேட்காமல் வீட்டுக்கு வந்து பிரபாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்.

பணத்தகராறு

கடந்த, 17-ஆம் தேதி இரவு, பிரபாவின் வீட்டுக்கு வந்த செல்வத்துக்கும், பிரபாவுக்கும் இடையே பணம் சம்பந்தமாக தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது பிரபாவை செல்வம் அடித்துள்ளார். இதனால், ஆத்திரம் அடைந்த பிரபா, தன்னுடன் பணிபுரியும் குமரேசன், குமார் ஆகியோரிடம் செல்வத்தை அடிக்குமாறு தெரிவித்துள்ளார்.

உயிரிழப்பு

இதையடுத்து, குமரேசன் மற்றும் குமார் இருவரும் சேர்ந்து செல்வத்தின் தலை மீது கட்டையால் அடித்ததில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சி அசைந்த பிரபா, குமரேசன், குமார் மூவரும் சேர்ந்து அவர்களுக்கு சொந்தமான ஆட்டோவில் செல்வத்தின் உடலை ஏற்றிக் கொண்டு சேலம் செல்லும் சாலையில் சென்று மாங்குட்டைபட்டி ஏரியில் வீசிவிட்டு வந்ததாக வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

English summary
Illegal relationship: A young man murdered by his lover in Edappadi. Police arrested 3.
Please Wait while comments are loading...