ஏடிஎம் மிஷினை அறுத்து கொள்ளை முயற்சி.. வடிவேல் பாணியில் மிளகாய் பொடி தூவிச் சென்ற திருடர்கள்- வீடியோ

சேலம்: சேலம் ராமகிருஷ்ணாரோட்டில் அமைந்துள்ள பாரத ஸ்டேட் வங்கி ஏடிஎம் மிஷினின் கீழ்பகுதியை வெட்டி மர்மநபர்கள் கொள்ளையடிக்க முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், திருட்டு முயற்சியில் ஈடுபட்டவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபர்கள் மிஷின் முழுவதும் மிளகாய் பொடியைத் தூவியும், சிசிடிவி கேமராவை உடைத்தும் தடயங்களை அழித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. காவலாளி வங்கியைச் சுற்றி ரோந்துக்குச் சென்றிருந்த நேரத்தில், இந்த கொள்ளை முயற்சி நடைபெற்றிருக்கலாம் எனத் தெரிகிறது. கொள்ளை முயற்சி நடைபெற்ற நேரத்தில் ஏடிஎம் மிஷினில் பல லட்சம் ரூபாய் ரொக்கம் இருந்துள்ளது.

வீடியோ:

English summary
In Salem some unknown persons have attempted for a robbery in a ATM by breaking the machine.
Please Wait while comments are loading...

Videos