இளம்பெண்ணிடம் வழிப்பறி முயற்சி... லாக்கப்பில் இளைஞர் மரணம்... ஷாக் சிசிடிவி காட்சிகள்- வீடியோ

சென்னை: சென்னையில் போலீஸ் நிலைய விசாரணையின்போது இறந்ததாக கூறப்படும் மீன் குழம்பு கார்த்திக்கின் மரணத்திற்கு முன்பு நடந்த படபடக்க வைக்க வைக்கும் நகைப் பறிப்பு சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது. சென்னை துரைப்பாக்கத்தில் கடந்த 18ம் தேதி இரவு இந்த வழிப்பறி சம்பவம் நடந்துள்ளது. மென்பொறியாளர் சிநேகலதா என்பவரிடம் நகை, பணம் பறிக்க நடந்த முயற்சி தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், சிந்தாரிப்பேட்டையை சேர்ந்த மீன் குழம்பு கார்த்திக், அவரது கூட்டாளி அருணாசலம் ஆகியோர் சிக்கினர். ஆனால் போலீசாரின் விசாரணையின் போது கார்த்திக் மர்மமான முறையில் உயிரிழந்தார். இதையடுத்து அவரை கொலை செய்து விட்டதாக கார்த்திக்கின் உறவினர்கள் கண்ணகி நகர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு, பெட்ரோல் குண்டு வீசியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

வீடியோ:

English summary
A 21-year-old man, arrested for allegedly snatching the gold chain of a techie, died in the custody of the Kannagi Nagar police here on Wednesday morning. The CCTV visuals of an attempt to rob a woman engineer has sent shock waves among people.
Please Wait while comments are loading...

Videos