இந்து முன்னணி பிரமுகர் வெட்டிக் கொலை... கோவையில் பேருந்துகள், கடைகள் மீது தாக்குதல், பதற்றம்- வீடியோ

கோவை: கோவை அருகே சுப்பிரமணியபாளையத்தை சேர்ந்த இந்து முன்னணி மாவட்ட செய்தி தொடர்பாளர் சசிகுமார் (35), 4 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சசிகுமாரின் மரண செய்தி குறித்து கேள்விப்பட்ட இந்து முன்னணி மற்றும் பாஜகவினர் மருத்துவமனை முன்பு திரண்டனர். இதனால் அங்கு பதட்டமான சூழல் நிலவியது. அதனைத் தொடர்ந்து பாதுகாப்பிற்காக அங்கு பெருமளவில் போலீசார் குவிக்கப்பட்டனர். கொலை செய்யப்பட்ட சசிகுமார் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக இந்து முன்னணி இயக்கத்தில் தீவிரமாக பணியாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே சசிகுமார் மரணத்திற்கு கண்டனம் தெரிவித்து பல்வேறு இடங்களில் வன்முறை சம்பவங்களும் அரங்கேறின. இதையடுத்து கோவை மாவட்டம் முழுவதும் முக்கிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது.

வீடியோ:

English summary
Following the murder of a Hindu Munnani spokesperson on Thursday night, tension prevailed in Coimbatore as functionaries began protesting in the city on Friday morning. Several buses and mosques were reportedly targeted. Schools and other educational institutions have been shut in most parts of the city.
Please Wait while comments are loading...

Videos