சென்னை ஏர்போர்ட் - சின்னமலை மெட்ரோ ரயில் இயக்கம்.. ஜெ. கொடியசைத்து தொடக்கி வைத்தார்- வீடியோ

சென்னை: சென்னையில் போக்குவரத்து நெரிசலை சமாளிக்கும் வகையில் 2 வழித்தடங்களில் (வண்ணாரப்பேட்டை- சென்னை விமானநிலையம், சென்டிரல்- பரங்கிமலை) 45 கிலோமீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் முதல் கட்டமாக கோயம்பேட்டில் இருந்து ஆலந்தூர் வரையிலான உயர்மட்ட பாதையில் கடந்த ஆண்டு ரயில் போக்குவரத்து தொடங்கியது. இந்நிலையில் இந்த உயர்மட்ட பாதையில் மெட்ரோ ரயில் போக்குவரத்து தொடக்கம் மற்றும் விமான நிலையம், மீனம்பாக்கம், நங்கநல்லூர் சாலை, கிண்டி, சின்னமலை ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்கள் திறப்பு ஆகிய நிகழ்ச்சிகள், சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றன. மெட்ரோ ரயில் இயக்கத்தை பச்சைக்கொடி அசைத்தும், மெட்ரோ ரயில் நிலையங்களை பொத்தானை அழுத்தியும் காணொலிக்காட்சி மூலம் முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.

வீடியோ:

English summary
Tamil Nadu Chief Minister today inaugurated services on the second elevated corridor of Chennai Metro Rail Project here and lauded the Centre for supporting development in the state.
Please Wait while comments are loading...

Videos