For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெ. சிங்கப்பூர் செல்வதாக கூறப்படுவது வதந்தி: சி.ஆர்.சரஸ்வதி விளக்கம்: வீடியோ

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா, கடந்த வியாழனன்று இரவு காய்ச்சல் காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், சாதாரண உணவு எடுத்துக் கொள்வதாகவும் மருத்துவமனை அறிக்கை வாயிலாகத் தெரிவித்து வருகிறது. ஆனால், முதல்வர் ஜெயலலிதா சிகிச்சைக்காக சிங்கப்பூரில் உள்ள மவுண்ட் எலிசெபத் மருத்துவமனைக்கு செல்ல வாய்ப்பிருப்பதாக சமூகவலைதளங்களில் செய்தி பரவி வருகிறது. ஆனால் இதனை அதிமுக மறுத்துள்ளது. மேலும் இது குறித்து அதிமுக செய்தித் தொடர்பாளர் சி.ஆர். சரஸ்வதி கூறுகையில், "முதல்வர் ஜெயலலிதா நலத்துடன் உள்ளார். தொண்டர்கள் கவலை அடைய வேண்டாம். முதல்வர் விரைவில் வீடு திரும்புவார். சிகிச்சைக்காக முதல்வர் சிங்கப்பூர் செல்வதாகக் கூறப்படும் தகவல் வதந்தி. அதை யாரும் நம்ப வேண்டாம்" எனக் கேட்டுக் கொண்டார்.

வீடியோ:

English summary
Reacting to the reports claiming that Tamil Nadu Chief Minister J Jayalalithaa will be flown to Singapore for medical treatment, the AIADMK on Saturday clarified that the rumour is false. “Amma is very well. Her fever has come down,” said CR Saraswathi, AIADMK.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X