காவிரி படுகையில் மணல் கொள்ளை.. மணல் லாரிகள் முன்பு போராட்டம் நடத்திய மக்கள்- வீடியோ

Subscribe to Oneindia Tamil

கரூர்: கரூர் மாவட்டம் தோட்டக்குறிச்சியை அடுத்த வீரராஜபுரம் கிராமத்தில் 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்தக் கிராமத்தை ஒட்டிய காவிரி ஆற்றுப்படுகையில் மணல் அள்ளப்படுவதால், குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படுவதாகவும், நிலத்தடி நீர் குறைந்து வருவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில், இன்று அங்குள்ள மணல் குவாரியை முற்றுகையிட்ட மக்கள் மணல் அள்ள எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சுமார் மூன்று மணி நேரம் அங்கு மணல் எடுக்கும் பணி பாதிக்கப்பட்டது. பின்னர் தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து, போராட்டம் கைவிடப்பட்டது.

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

English summary
Near Karur the public staged a protest to stop sand mining in Cauveri river basins.
Please Wait while comments are loading...