ராம்குமார் சகோதரிகளுக்கு அரசு வேலை... நேரில் ஆறுதல் கூறிய ஜவாஹிருல்லா கோரிக்கை- வீடியோ

நெல்லை: சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார், கடந்த ஞாயிறன்று சிறை வளாகத்திலேயே மின்கம்பியைக் கடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுவதற்காக மனித நேய மக்கள் கட்சித்தலைவர் ஜவாஹிருல்லா செங்கோட்டை தாலுகா மீனாட்சி புரம் கிராமத்திற்கு இன்று வந்தார். அங்கு அவர் ராம்குமாரின் தாய் புஷபா, சகோதரிகள் காளிஸ்வரி, மதுபாலா ஆகியோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர், 'ராம்குமார் சகோதரிகளுக்கு அரசு பணி வழங்க வேண்டும்' என வலியுறுத்தினார்.

வீடியோ:

English summary
The manithaneya makkal katchi leader M.H. Jawahirullah has demanded the Tamil nadu government to give job for Swathi murder accused Ramkumar's sisters.
Please Wait while comments are loading...

Videos