திடீர் உடல்நலக்குறைவு... முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதி- வீடியோ

சென்னை: அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா திடீர் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று இரவு சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காய்ச்சல் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாகவும், தற்போது அவரது உடல் நிலை சீராக உள்ளதாகவும் மருத்துவமனை அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளது. ஜெயலலிதா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனை வாசலில் அமைச்சர்கள் மற்றும் அதிமுக தொண்டர்கள் குவிந்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பாதுகாப்பிற்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை முடிந்து ஜெயலலிதா இன்று வீடு திரும்புவார் எனக் கூறப்படுகிறது.

வீடியோ:

English summary
Tamil Nadu Chief Minister J Jayalalithaa, who was admitted to the Apollo Hospital late Thursday with fever and dehydration, is under observation, said hospital authorities here on Friday.
Please Wait while comments are loading...

Videos