நிலத்தகராறு.. மின் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த இளம்பெண்.. திருப்பூரில் பரபரப்பு- வீடியோ

திருப்பூர்: திருப்பூரில் இளம்பெண் ஒருவர் உயர் மின் அழுத்தக் கோபுரத்தில் தற்கொலைக்கு விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திருப்பூர் எம்.எஸ்.நகர் பகுதியைச் சேர்ந்த குமாரசாமி என்பவரது மனைவி சங்கீதா. நிலத்தகராறு தொடர்பாக சங்கீதாவிற்கும், அவரது உறவினர்களுக்கும் இடையே பிரச்சினை இருந்து வருவதாகக் கூறப்படுகிறது. இதனால் சங்கீதாவின் வீட்டிற்கு மின் இணைப்பு கொடுக்க அவரது உறவினர்கள் இடையூறு செய்துள்ளனர். இதனால் மனமுடைந்த சங்கீதா அருகில் இருந்த உயர் மின் அழுத்தக் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், இரண்டு மணி நேர போராட்டத்திற்குப் பின் சங்கீதாவை சமாதானப் படுத்தி கீழே அழைத்து வந்தனர்.

வீடியோ:

English summary
In Tirupur a woman tried to commit suicide by climbing a Electrical tower as she was denied EB connection.
Please Wait while comments are loading...

Videos