குடும்பத்தகராறு... மாமியாரை வெட்டிக் கொன்ற மருமகனுக்கு ஆயுள் தண்டனை- வீடியோ

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: விழுப்புரத்தில் குடும்பத் தகராறில் மாமியாரை வெட்டிக் கொன்ற மருமகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விழுப்புரம் அருகே மணலூர்பேட்டையைச் சேர்ந்தவர் காசிநாதன். இவர் கடந்த 2013ம் ஆண்டு குடும்பத்தகராறு காரணமாக மாமியார் கௌரியையும், மனைவி ரேவதியையும் அரிவாளால் வெட்டினார். இதில், கௌரி பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக கைது செய்யப்பட்ட காசிநாதன், சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், காசிநாதனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 1500 அபராதமும் விதித்து உத்தரவிட்டனர். மேலும், அபராதத்தொகையைக் கட்டத் தவறினால், இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்தனர்.

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

English summary
In Villupuram, the court has given life sentence for the accused who killed his mother-in-law in a family dispute.
Please Wait while comments are loading...