குடிபோதையில் சாப்பாடு சரியில்லை என தகராறு.. கணவரை கட்டையால் அடித்துக் கொன்ற மனைவி கைது- வீடியோ

சென்னை: சென்னையில் குடிபோதையில் தகராறு செய்த கணவரை உருட்டுக் கட்டையால் அடித்துக் கொன்ற மனைவியைப் போலீசார் கைது செய்துள்ளனர். உயிரிழந்த ரவிச்சந்திரன் கடந்த 10 ஆண்டுகளாக வீட்டுச் செலவுக்கு பணம் தரவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் அடிக்கடி கணவன், மனைவி இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்றும் வழக்கம்போல் குடித்து விட்டு வந்து சாப்பாடு சரியில்லை என தகராறில் ஈடுபட்ட ரவிச்சந்திரன் கோபத்தில் தனது மனைவி நிர்மலாதேவியை கட்டையால் அடித்துள்ளார். வலி பொறுக்க முடியாத நிர்மலா தேவி பதிலுக்கு அதே கட்டையைப் பிடுங்கி கணவரை அடித்துள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே ரவிச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

வீடியோ:

English summary
A man was killed during a scuffle with his wife at Peravallur, Chennai yesterday.
Please Wait while comments are loading...

Videos