ஏ பிரிவில் நேற்று நடைபெற்ற போட்டியில் ஒரு வினோதம் நடந்தது. இப்போட்டியில் மோதிய உருகுவே, மெக்சிகோவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இருப்பினும் மெக்சிகோவும், வென்ற உருகுவேயும் நாக் அவுட் ரவுண்டுக்குத் தகுதி பெற்றன.ஏ பிரிவில் இரு அணிகளுமே முதலிடத்தில் இருந்து வந்தன. மேலும் இன்னொரு போட்டியில் பிரான்ஸ் தோல்வியைத் தழுவி விட்டதால், இரு அணிகளுக்குமே எந்தப் பிரச்சினையும் இல்லாமல் போய் விட்டது. இரு அணிகளுமே கடுமையாக மோதின. முதல் பாதி ஆட்டம் முடிய 2 நிமிடங்கள் இருந்த நிலையில், 43வது நிமிடத்தில் ஒரு கோலடித்தார் உருகுவேயின் விக்டர் கசாய். இதன் மூலம் உருகுவே முன்னிலை பெற்றது.ஆனால் அதன் பின்னர் உருகுவே மேலும் கோலடித்து விடாமல் தடுக்கும் வகையில் தடுப்பாட்டத்தில் குதித்தது மெக்சிகோ.இந்தப் போட்டியில் தோற்றதன் மூலம் நாக் அவுட் ரவுண்டில் தற்போது அர்ஜென்டினாவை சந்திக்க வேண்டியதாகி விட்டது மெக்சிகோ என்பது குறிப்பிடத்தக்கது.உருகுவே தான் ஆடிய மூன்று போட்டிகளிலும் தோல்வியைத் தழுவவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டில் வென்று, ஒன்றை டிரா செய்தது உருகுவே.மெக்சிகோ அணியோ ஒரு வெற்றி, ஒரு தோல்வி, ஒரு டிரா என தட்டுத் தடுமாறி நாக் அவுட் ரவுண்டுக்கு வந்துள்ளது.இந்தப் போட்டியுடன் ஏ பிரிவில் சுற்றுப் போட்டிகள் முடிவுக்கு வந்தன.