நெதர்லாந்தே உலகக் கோப்பையை வெல்லும்-சிங்கப்பூர் கிளி மணி ஆரூடம்

By:
Subscribe to Oneindia Tamil

தென் ஆப்பிரிக்க உலகக் கோப்பைப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் நெதர்லாந்தே வெல்லும் என சிங்கப்பூரைச் சேர்ந்த முனியப்பன் என்பவரின் கிளி மணி ஆரூடம் கூறியுள்ளது.

ஜெர்மனியைச் சேர்ந்த பால் என்ற ஆக்டோபஸ், ஜெர்மனி தோற்கும், ஸ்பெயின் வெல்லும் என ஆரூடம் கூறி, அது பலித்து பெரும் பிரபலமாகி விட்டது.

இந்த நிலையில் சிங்கப்பூரில் ஒரு கிளி ஜோசியர், இறுதிப் போட்டியில் நெதர்லாந்தே வெல்லும் என தனது கிளி மூலம் ஆரூடம் கூறியுள்ளார்.

சிங்கப்பூரில் வசித்து வரும் தமிழர் முனியப்பன். இவர் ஒருகிளி ஜோசியர். இவருடைய கிளி மணி. இது கடந்த 7 வருடங்களாக பல்வேறு ஆரூடங்களை சரியாக கூறி வருகிறதாம்.

தற்போது உலகக் கோப்பை சீசன் என்பதால், இறுதிப் போட்டியில் யார் வென்று கோப்பையை தட்டிச்செல்வார்கள் என்பதை தனது கிளி மூலம் ஆரூடம் கூறியுள்ளார் முனியப்பன். அதன்படி இறுதிப் போட்டியில் நுழைந்துள்ள நெதர்லாந்து, ஸ்பெயின் நாடுகளின் கொடி பதிக்கப்பட்ட சீட்டுக்களை கிளியிடம் கொடுத்தார்.

அப்போது மணி, நெதர்லாந்து கொடி பதித்த அட்டையை எடுத்துக் கொடுத்து கீ கீ என்று கத்தியது. இதையடுத்து நெதர்லாந்துதான் வெல்லும் என கிளி கூறுவதாக தெரிவித்தார் முனியப்பன்.

தனது கிளி இதுவரை தவறாக கணித்ததில்லை என்று கூறும் முனியப்பன், இந்த முறையும் நெதர்லாந்து வெல்லும் என்று கூறிய அதன் கணிப்பு பலிக்கும் என்று நம்பிக்கையுடன் கூறினார்.

Please Wait while comments are loading...