For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கண்களுக்கு விருந்து.. பவானிசாகர் அணை நீர்த்தேக்கத்தில் மீனுக்காக காத்திருக்கும் பெலிகான் பறவைகள்

Google Oneindia Tamil News

ஈரோடு: ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணை நீர்த் தேக்கத்தில் மீனுக்காக பெலிகான் பறவைகள் காத்திருக்கின்றன.

Recommended Video

    பவானிசாகர் அணை நீர்த்தேக்கத்தில் மீனுக்காக காத்திருக்கும் பெலிகான் பறவைகள்

    ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணை 105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவு கொண்டதாகும். இந்த அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

    Birds are waiting in Bhavani Sagar Dam looking for fish in Erode

    அணையின் நீர்மட்டம் இன்றைய நிலவரப்படி 79.74 அடியாக உள்ளது. அணை நீர்த் தேக்கம் பகுதி பரந்து விரிந்து வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளதால் பல்வேறு வகையான வெளிநாட்டு பறவைகள் இங்கு வந்து செல்வது வழக்கம்.

    இந்நிலையில் தற்போது பவானிசாகர் அணை நீர்த்தேக்கப் பகுதியில் பெலிகான் பறவைகள் முகாமிட்டுள்ளன. காலை மற்றும் மாலை நேரங்களில் பெலிகான் பறவைகள் அணையின் நீர்தேக்கப் பகுதியில் காற்றின் வேகத்தில் அலை அடிப்பதால் அதில் வரும் மீன்களை கொத்தி உண்பதற்காக காத்துக் கிடக்கின்றன.

    முன்னோடி விவசாயிகள்- வேளாண் சாதனையாளர்களை உலகுக்கு அறிமுகம் செய்வோம் முன்னோடி விவசாயிகள்- வேளாண் சாதனையாளர்களை உலகுக்கு அறிமுகம் செய்வோம்

    அணையின் நீர்த் தேக்க பகுதியில் பெலிகான் பறவைகள் முகாமிட்டுள்ள காட்சி காண்போர் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

    English summary
    Birds at Bhavani Sagar Dam are waiting for fish as the water level increases.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X