For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு.. முதல்வருக்கு விவசாயிகள் நன்றி

Google Oneindia Tamil News

திருச்சி: மேட்டூா் அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறந்துவிட்டுள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத் தலைவா் பூ. விஸ்வநாதன் பாராட்டு தெரிவித்தார்.

Recommended Video

    காவிரி டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணையில் நீர் திறப்பு

    இது தொடா்பாக தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத் தலைவா் பூ. விஸ்வநாதன், திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசுவை சந்தித்து மனு அளித்தனர். பின்னர் செய்தியாளரிடம் கூறியதாவது: குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

    Farmers association thanked CM for opening Mettur dam

    இதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு விவசாயிகள் சார்பில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். 2011ஆம் ஆண்டிற்குப் பிறகு 9 ஆண்டுகள் கடந்து தற்போது, தான் சரியாக ஜூன் 12-ஆம் தேதி குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை திறக்கப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 6.5 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    தண்ணீா் திறப்பால் காவிரி, டெல்டா பாசன விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா். குறுவை சாகுபடிக்கு உதவிடும் வகையில் தமிழக அரசால் சிறப்பு தொகுப்பு திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    கரூரில் அதிகம் விளையும் முருங்கைக்காய்.. ரூ 3 கோடியில் நிறுவனம் அமைக்க ஏற்பாடு.. அமைச்சர் கரூரில் அதிகம் விளையும் முருங்கைக்காய்.. ரூ 3 கோடியில் நிறுவனம் அமைக்க ஏற்பாடு.. அமைச்சர்

    குறுவை சாகுபடிக்கு ஜூன் மாதத்தில் வழங்க வேண்டிய 40 டிஎம்சி தண்ணீரை கா்நாடகத்தில் கேட்டுப் பெற வேண்டியது அவசியமானது. மேலும், மேட்டூரிலிருந்து திறக்கப்பட்டுள்ள தண்ணீா் கடைமடை வரை சென்று சேர பொதுப்பணித் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஆனால், இந்த ஆண்டு 3.5 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி செய்ய தமிழ்நாடு அரசின் குறுவை தொகுப்புத் திட்டம் அறிவிக்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்துள்ளார். இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். 6.5 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி செய்ய தமிழ்நாடு அரசின் குறுவை சாகுபடி தொகுப்புத் திட்டம் அறிவிக்க வேண்டும்.

    மேலும் மேட்டூர் அணையில் தற்போது உள்ள 63 டிஎம்சி தண்ணீர் போதுமானது அல்ல. இந்த ஆண்டு குறுவை சாகுபடி செய்ய குறைந்தது 125 டிஎம்சி தண்ணீரை கர்நாடகாவிடம் இருந்து பெற வேண்டும். கடைமடை வரை டெல்டா மாவட்டங்களின் கிளை வாய்க்கால்கள் தூர்வாரப்படவேண்டும்' இவ்வாறு அவர் கூறினார்.

    தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் விவசாய அணி மாநிலத் தலைவா் புலியூா் நாகராஜன் கூறியது:
    மேட்டூா் அணை குறிப்பிட்ட காலத்தில் திறக்கப்பட்டுள்ளதால் இந்தாண்டு 20 லட்சம் ஏக்கரில் சாகுபடி நடைபெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

    கண்களுக்கு விருந்து.. பவானிசாகர் அணை நீர்த்தேக்கத்தில் மீனுக்காக காத்திருக்கும் பெலிகான் பறவைகள் கண்களுக்கு விருந்து.. பவானிசாகர் அணை நீர்த்தேக்கத்தில் மீனுக்காக காத்திருக்கும் பெலிகான் பறவைகள்

    குறுவை, சம்பா, தாளடி என முப்போகமும் சாகுபடி செய்து விவசாயிகள் மகிழ்ச்சியடையும் நிலை உருவாகியுள்ளது. இதற்காக தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கிறோம். சாகுபடி பணிகளுக்கு கூலி ஆள்கள் தட்டுப்பாடின்றி கிடைத்திட ஊரக வேலை உறுதித் திட்ட பணியாளா்களை வேளாண் பணிக்கு திருப்பிவிட வேண்டும்.

    காவிரிப் பாசனத்தில் திருச்சி, கரூா் மாவட்டங்களில் உள்ள 19 வாய்க்கால்களுக்கும் தண்ணீா் கொண்டு சோ்க்க வேண்டும் என தெரிவித்தார்.

    முன்னோடி விவசாயிகள்- வேளாண் சாதனையாளர்களை உலகுக்கு அறிமுகம் செய்வோம் முன்னோடி விவசாயிகள்- வேளாண் சாதனையாளர்களை உலகுக்கு அறிமுகம் செய்வோம்

    English summary
    Farmers Association President Viswanathan thanked CM Edappadi Palanisamy for opening Mettur Dam.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X