For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கொட்டித் தீர்க்கும் கனமழை!

Google Oneindia Tamil News

டெல்லி: நாட்டின் பல மாநிலங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை கொட்டித் தீர்க்கும் என்றும் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டோடும் என்றும் புயல் எச்சரிக்கை மையம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

Recommended Video

    சென்னையில் வெளுத்த 'அதே பேய் மழை' டெல்லியில்.. அதிர வைக்கும் காட்சிகள்

    புயல் எச்சரிக்கை மைய அறிக்கை:

    மத்திய மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களின் மலைப்பகுதிகளில் , பரவலாக மிக பலத்த மழை பெய்யும். மற்ற இடங்களில், கனத்த மழை முதல் மிகப்பலத்த மழை பெய்யக்கூடும்.

    Heavy to very Heavy rainfall for many states: Cyclone Warning Centre

    அடுத்த 4-5 நாட்களுக்கு ஒடிசா, சத்தீஷ்கர் மாநிலங்களில் பலத்த மழை முதல் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. சத்தீஷ்கர், மகாராஷ்டிரா, தெலங்கானாவில் மிக பலத்த மழை காரணமாக, கோதாவரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    கிருஷ்ணா படுகையில் உள்ள பெரும்பாலான அணைகளில் நீர் அளவு 86 சதவீதம் முதல் 98 சதவீதம் வரை உள்ளது. ஹிட்கால் அணையின் மொத்த கொள்ளளவில் 98 சதவீதம் நீர் நிரம்பியுள்ளதால், 28,656 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

    அடுத்த 3 நாட்களுக்கு, கிழக்கு ராஜஸ்தான், மேற்கு மத்தியப் பிரதேசம் பகுதிகளில் மிக பலத்த மழை பெய்யக்கூடும் என முன்னறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதால், சம்பல், மகி, சபர்மதி, கலிசிந்த் பனாஸ் (கிழக்கு மற்றும் மேற்கு நோக்கிய ஓட்டம்) போன்ற ஆறுகளில் தண்ணீர் மட்டம் அதிகரிக்க வாய்ப்பு .

    Heavy to very Heavy rainfall for many states: Cyclone Warning Centre

    பலத்த மழை முதல் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்பு. உத்தரகாண்டில் அதிதீவிர மழைப்பொழிவு காரணமாக, சட்லெஜ், ரவி, பியாஸ், கக்கர், யமுனா, பாகிரதி, அலகண்டா, கங்கை, ராம்கங்கா, சாரதா, சர்ஜூ, காக்ரா போன்ற நதிகளில் நீர்மட்டம் அதிகரிக்கும்.

    பீகாரில் பல ஆறுகளில் தொடர்ந்து, இயல்புக்கும் அதிகமான அளவு வெள்ள நிலை நிலவுகிறது. இந்த நிலை 3-4 நாட்களுக்கு நீடிக்கும்.

    அணைகளை இயக்குவதில் மாநில அரசுக்கு முழு அதிகாரம் வேண்டும் - மத்திய அரசிடம் முதல்வர் கோரிக்கை அணைகளை இயக்குவதில் மாநில அரசுக்கு முழு அதிகாரம் வேண்டும் - மத்திய அரசிடம் முதல்வர் கோரிக்கை

    பிரம்மபுத்ரா ஜோர்கத், சோனித்பூர், கோலாகாட், சிப்சாகர், துப்ரி மாவட்டங்களில் உள்ள துணை நதிகளில் வெள்ளநிலை தொடரும். மழை முன்னறிவிப்பால், மற்ற மாவட்டங்களிலும் வெள்ள நிலை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

    இவ்வாறு புயல் எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.

    English summary
    Based on the rainfall forecast, advisories are issued by Cyclone Warning Centre for various States.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X