For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நாகை கடைமடை பகுதியில் காவிரி நீர்.. நேரடி நெல் விதைப்பு- விவசாய பணிகள் கனஜோர்

Google Oneindia Tamil News

நாகப்பட்டினம்: மேட்டூர் அணையில் திறந்து விடப்பட்ட தண்ணீர் நாகை மாவட்டத்தின் கடைமடை பகுதிகளுக்கு வந்தது தொடர்ந்து நேரடி நெல் விதைப்பு பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்

Recommended Video

    நாகை கடைமடை பகுதியில் காவிரி நீர்.. நேரடி நெல் விதைப்பு - விவசாய பணிகள் தீவிரம்

    குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து 8 ஆண்டுகளுக்கு பிறகு ஜூன் 12ஆம் தேதி திறந்து விடப்பட்ட தண்ணீர் நாகப்பட்டினம் மாவட்டத்தின் கடைமடை பகுதிகளுக்கு வந்தடைந்தது. இதனைத் தொடர்ந்து குறுவை சாகுபடி பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

     Nagai Farmers adopt Direct sowing of Paddy with Drum Seeder

    நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த செம்பியன்மகாதேவி, நீடூர், வேப்பஞ்சேரி, தண்ணிலபாடி உள்ளிட்ட பகுதிகளில் மறவன் வாய்க்காலுக்கு தண்ணீர் வந்ததை தொடர்ந்து வயல்களில் டிராக்டர் மூலம் உழுது,வயல் வரப்புகளை சீரமைத்தல் மற்றும் 90 நாட்கள் பயிரான TKM9 நெல் ரகத்தை நேரடி நெல் விதைப்பு மூலம் விவசாயிகள் குழுவாக நெல் தெளிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

     Nagai Farmers adopt Direct sowing of Paddy with Drum Seeder

    இதனால் 8 ஆண்டுகளுக்கு பிறகு சரியான நேரத்தில் தண்ணீர் திறந்து விடப்பட்டு கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் வந்து சேர்ந்துள்ளதாகவும், போதிய மழையும் பெய்யும் என நம்பிக்கையுடன் நல்ல மகசூல் கிடைக்கும் என நம்பிக்கையில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்

    இடம்பெயர் தொழிலாளர்களுக்கு இலவச ரேஷன்... தமிழகம் உட்பட 11 மாநிலங்களில் 1% கூட வழங்கவில்லையாம்! இடம்பெயர் தொழிலாளர்களுக்கு இலவச ரேஷன்... தமிழகம் உட்பட 11 மாநிலங்களில் 1% கூட வழங்கவில்லையாம்!

    English summary
    Nagai Farmers adopted Direct sowing of Paddy with Drum Seeders.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X