For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வெங்காயம் பறிக்க வரும் பிற மாவட்ட தொழிலாளர்களுக்கு உடனே இ பாஸ் வழங்க வலியுறுத்தல்

Google Oneindia Tamil News

கோயம்புத்தூர்: வெங்காயம் பறிக்க வருகை தரும் பிற மாவட்ட தொழிலாளர்களுக்கு உரிய காலத்தில் இ பாஸ் கொடுத்தாலே விலையேற்றத்தை குறைக்க முடியும் என்கின்றனர் கோவை விவசாயிகள்.

Recommended Video

    வெங்காயத்தை பறிக்க வரும் பிற மாவட்ட தொழிலாளர்களுக்கு உடனே இ பாஸ் வழங்க வலியுறுத்தல்

    கோவை புறநகர் மாவட்டம் முழுவதும் விவசாயம்தான் பிரதான தொழிலாக இருந்து வருகிறது. மேற்கு மலைத்தொடர்ச்சியை ஒட்டி இருக்கும் தொண்டாமுத்தூர், நரசீபுரம், செம்மேடு, சிறுவாணி , ஆலாந்துறை பகுதிகளில் காளிபிளவர், சின்ன வெங்காயம், தக்காளி, முள்ளங்கி, புடலங்காய், வாழைக்காய், அவரை, துவரை, திராட்சை உள்ளிட்டவை பயிரிடப்பட்டு வருகின்றன.

    Onion farmers urge to E pass for other Dist Labourers

    கொரொனா எதிரொலியால் கடந்த மாதம் வாழை இலை மற்றும் தக்காளிக்கு சரியான விலை கிடைக்காததால் வயல்களை விவசாயிகளே தீயிட்டு அழித்தனர். இந்நிலையில் நரசீபுரம், தொண்டாமுத்தூர் பகுதிகளில் 3000 ஏக்கர் பரப்பளவில் வெங்காய சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

    60 நாள் பயிரான வெங்காயம் இந்தப்பகுதியில் நடப்பட்டு தற்போது 45 நாட்களாகிவிட்டது. வெங்காயத்தை இன்னும் 15 நாட்களில் பறிக்கக்கூடிய நிலையில், வெங்காயம் பறிக்கும் தொழிலாளர்கள் இல்லாமல் விவசாயகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

    Onion farmers urge to E pass for other Dist Labourers

    தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வெங்காயம் பறிப்பதற்காக சுமார் 500 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கோவைக்கு வரவேண்டி உள்ளது. இவர்களுக்கு இ பாஸ் வழங்க வேண்டும்.

    தமிழர் தொன்மத்தின் சாட்சி கீழடியில் அருங்காட்சியகம்- முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார் தமிழர் தொன்மத்தின் சாட்சி கீழடியில் அருங்காட்சியகம்- முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்

    தற்போது மழை பெய்து கொண்டிருப்பதால் வெங்காயம் அழுகக்கூடிய நிலைக்கு தள்ளப்படும் முன் இந்த இ பாஸ் வழங்க வேண்டும். அப்படி செய்தால்தான் வெங்காயத்தின் விலை ஏறாமல் தற்போது இருப்பதுபோலவே தொடரும் என்கின்றனர் கோவை விவசாயிகள்.

    English summary
    Onion farmers had urged to E pass for othe Dist Labourers.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X