For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இயற்கை விவசாயத்தால், குறைந்த செலவில் அதிக மகசூல்.. கிருஷ்ணகிரி மாவட்ட எலுமிச்சை விவசாயிகள் மகிழ்ச்சி

Google Oneindia Tamil News

ஒசூர்: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இயற்கை விவசாயம் மூலம் எலுமிச்சை சாகுபடி செய்யப்படுவதால் தரமான எலுமிச்சை பழங்கள் கிடைப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காய்கறிகள் மட்டுமின்றி மலர் வகைகளையும் விவசாயிகள் விரும்பி சாகுபடி செய்து வருகின்றனர். தற்போது விவசாயிகள் ரசாயன பயன்பாட்டினை குறைத்து, இயற்கை விவசாயத்திற்கு மாறிவருகின்றனர்.

organic lemon farming increasing in Krishnagiri district

இதில் மகராஜா கடை, பெரிய கோட்டப்பள்ளி, மேகல சின்னம்பள்ளி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விவசாயிகள் தற்போது இயற்கை விவசாயம் மூலம் எலுமிச்சை சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

organic lemon farming increasing in Krishnagiri district

ரசாயன உரங்களின் பயன்பாட்டை குறைத்து, விவசாயிகள் மண்புழு உரம் மூலம் எலுமிச்சை சாகுபடி செய்துள்ளனர். இயற்கை விவசாயம் மூலம் சாகுபடி செய்யப்பட்டுள்ள எலுமிச்சை செடிகள் நன்கு வளர்ந்து, தரமான காய்கள் பிடித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

organic lemon farming increasing in Krishnagiri district

மேலும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அறுவடை செய்யப்படும் எலுமிச்சை பழங்கள் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனைக்கு அனுப்பபடும், ஆனால் கடந்த சில ஆண்டுகளாக எலுமிச்சை பழங்களின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

organic lemon farming increasing in Krishnagiri district

செடிகளில் காய்ப்பு குறைந்துள்ளதால், தற்போது மண்புழு உரம் மற்றும் இயற்கை உரம் மூலமாக எலுமிச்சை சாகுபடியில் நல்ல மகசூல் கிடைத்துள்ளது, இதில் ரசாயன உர சாகுபடியை காட்டிலும், இயற்கை உரம் மூலம் சாகுபடி செய்யப்பட்டுள்ள எலுமிச்சை பழம் நல்ல தரமாகவும், குறைந்த செலவில் அதிக மகசூல் கிடைப்பதாகவும் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டனர்.

Recommended Video

    அத்திப்பழம் சாகுபடியில் அசத்தும் திருப்பூர் இளைஞர்

    வீரமரணடைந்த வீரர் பழனியின் குடும்பத்துக்கு ரூ20 லட்சம் நிதி உதவி- தமிழக அரசுவீரமரணடைந்த வீரர் பழனியின் குடும்பத்துக்கு ரூ20 லட்சம் நிதி உதவி- தமிழக அரசு

    English summary
    Farmers are happy to know that lemon is cultivated by natural agriculture in Krishnagiri district.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X