For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாகிஸ்தானில் கனஜோர்- விடிய விடிய களைகட்டும் விவசாயிகளின் வெட்டுக்கிளிகள் வேட்டை- 1 கிலோ விலை ரூ20

Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் வேளாண்பயிர்களை நாசம் செய்யும் பாலைவன வெட்டுக் கிளிகளை அழிக்கும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள திட்டம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து படையெடுக்கும் வெட்டுக் கிளிகள் இந்த முறை பாகிஸ்தானை மட்டுமல்ல இந்தியாவையும் பெரும் அச்சுறுத்தலுக்குள்ளாக்கி இருக்கிறது. வேளாண் பயிர்களை முற்றாக நாசமாக்கும் வெட்டுக் கிளிகளை ஒழிப்பது தொடர்பாக ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

Pakistan Farmers sell locusts for Rs20 per kg

இந்த நிலையில் வெட்டுக்கிளிகளை முழுமையாக ஒழிக்க முடியாவிட்டாலும் ஓரளவு அதை கட்டுப்படுத்தும் நடவடிக்கையை பாகிஸ்தான் அறிமுகப்படுத்தியுள்ளது. வெட்டுக்கிளிகளை கோழி பண்ணைகளிலும் மீன்வளர்ப்பிலும் தீவனமாக பயன்படுத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

இதற்காக வெட்டுக்கிளிகளை பிடித்து தரும் விவசாயிகளுக்கு பணம் தருவது எனவும் முடிவு செய்யப்பட்டது. ஒரு கிலோ வெட்டுக்கிளிக்கு ரூ20 வழங்கப்படுகிறது. இது விவசாயிகளிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Recommended Video

    வெட்டுக்கிளி வந்தால் எப்படி தடுக்கலாம்? வேளாண்துறை விளக்கம்| Oneindia Tamil

    கூரை மீது ஏறிய நமீதா.. உடனே கிடைத்தது சூப்பர் கனெக்ஷன்.. காரணத்தை கேட்டால் அசந்துடுவீங்க!கூரை மீது ஏறிய நமீதா.. உடனே கிடைத்தது சூப்பர் கனெக்ஷன்.. காரணத்தை கேட்டால் அசந்துடுவீங்க!

    இரவு நேரங்களில் மரங்களில் ஒட்டிக் கொண்டிருக்கும் இந்த வெட்டுக் கிளிகளை வேட்டையாடுவதற்காக விடிய விடிய வயல்வெளிகளில் முகாமிடுகின்றனர் விவசாயிகள். இப்போது பாகிஸ்தானின் முக்கிய சந்தைகளில் வெட்டுக் கிளிகள் விற்பனை படுஜோராக நடைபெற்றும் வருகிறது.

    English summary
    Chicken and fish feed factories in Pakistan are asking farmers to sell them locusts for Rs20 per Kg.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X