For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரசாயன உரத்திற்கு மாற்றாக இயற்கை விவசாயத்திற்கு மாறும் சத்தியமங்கலம் விவசாயிகள்

Google Oneindia Tamil News

சத்தியமங்கலம்: வாழையில் ஊடுபயிராக பயிரிடப்பட்ட தட்டைப்பயறு செடியை பசுந்தாள் உரமாக மாற்றும் பணியில் சத்தியமங்கலம் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கிராமங்களில் விவசாயிகள் அதிக அளவில் வாழை பயிரிட்டுள்ளனர். வாழைக்கு ரசாயன உரமிட அதிக செலவாகும் என்பதால் தற்போது விவசாயிகள் வாழை நடவு செய்யும் போது இடைவெளியில் தட்டைப்பயறு செடியை ஊடுபயிராக பயிரிட்டுள்ளனர்.

Sathiyamangalam farmers shift to Organic method

செடி மூன்று மாதங்களில் நன்கு வளர்ந்தபின் செடியை வாழைக்கு அடியுரமாக மாற்றும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. டில்லர் இயந்திரத்தைப் பயன்படுத்தி செடியைத் துண்டு துண்டாக ஆக்கி அடியுரமாக மாற்றப்படுகிறது.

Sathiyamangalam farmers shift to Organic method

தட்டை பயறு செடியில் உள்ள இலைகள் அடியுரமாக இட்டால் மண் இளகி நல்ல காற்றோட்டம் கிடைப்பதால் வாழை நன்கு வளர்ந்து நல்ல விளைச்சல் கொடுக்கும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். ரசாயன உரத்துக்கு மாற்றாக பசுந்தாள் உரம் இட்டு இயற்கை விவசாயத்திற்கு விவசாயிகள் மாறி வருகின்றனர்.

Sathiyamangalam farmers shift to Organic method

 நோய் தாக்குதலின் பிடியில் அழுகும் வெங்காயம்- நிவாரணம் கோரும் விவசாயிகள் நோய் தாக்குதலின் பிடியில் அழுகும் வெங்காயம்- நிவாரணம் கோரும் விவசாயிகள்

English summary
Sathiyamangalam farmers now shifte to Organic methods.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X