For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தென்மேற்கு பருவமழை தீவிரம்- பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றார் அணைகளில் பாசனத்துக்கு நீர் திறப்பு

Google Oneindia Tamil News

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றார் அணைகளில் விவசாயத்துக்கு நீர் திறக்கப்பட்டுள்ளது.

Recommended Video

    தென்மேற்கு பருவமழை தீவிரம்- பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றார் அணைகளில் பாசனத்துக்கு நீர் திறப்பு

    கன்னியாகுமரி மாவட்டத்தில் விவசாயத்திற்கு நீராதாரமாக விளங்குவது பேச்சிப்பாறை அணை குமரி மாவட்டம் மட்டுல்லாது நெல்லை மாவட்டத்தின் ராதாபுரம் தாலூகா பகுதிவரை விவசாயத்திற்கு பயன்படுகிறது.கடந்த சில தினங்களாக பெய்து வரும் தென்மேற்கு பருவமழை காரணமாக அணைகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

    Southwest Monsoon: Water released from Pechiparai dam

    மாவட்டத்திலுள்ள அணைகளில் விவசாயத்திற்கு தண்ணீர் திறந்துவிடக்கோரி விவசாயிகள் கோரிக்கை வைத்து வந்தனர். அதனடிப்படையில் விவசாயிகளின் கோரிக்கை ஏற்று கோதையாறு மற்றும் பட்டிணங்கால் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டார்.

    Southwest Monsoon: Water released from Pechiparai dam

    இதனையடுத்து 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையில் இருந்து விவசாய தேவைக்காக 850 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் முன்னிலையில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் மதகுகளை திறந்து வைத்தார்.

    இதில் எம்.எல்.ஏ. மனோ தங்கராஜ், விவசாய பிரதிநிதிகள் கலந்து கொண்டனர் . முன்னதாக அணை அடிவாரத்தில் உள்ள பேச்சியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

    Southwest Monsoon: Water released from Pechiparai dam

    வரும் ஜனவரி மாதம் 28தேதி வரை தண்ணீர் திறந்து விடப்படும் இதனால் 79ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் மற்றும் 2040 குளங்கள் பயனடையும்.

    தற்போது தென் மேற்கு பருவ மழை பெய்து வரும் காரணத்தால் 39 அடி நீர் இருப்பு உள்ளது. இதை தொடர்ந்து பெருஞ்சாணி,சிற்றார் உள்ளிட்ட அணைகளிலும் விவசாயத்திற்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

    மீண்டெழும் ஆதி தமிழர் வரலாறு- ஆதிச்சநல்லூரில் 3,000 ஆண்டுகள் பழமையான 2 முதுமக்கள் தாழி கண்டெடுப்பு மீண்டெழும் ஆதி தமிழர் வரலாறு- ஆதிச்சநல்லூரில் 3,000 ஆண்டுகள் பழமையான 2 முதுமக்கள் தாழி கண்டெடுப்பு

    English summary
    As per the orders of the Chief Minister Edappadi Palanisamy water was released from Pechiparai dam for irrigation.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X