• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தமிழகம், புதுவையில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

|

சென்னை: தென்மேற்கு பருவமழையால் தமிழகம், புதுவையில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிவிக்கை:

TN, Puducherry likely to receive rain

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதியில் அடுத்த 2 நாட்களுக்கு தென்மேற்கு பருவக்காற்று காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

கடந்த 24 மணிநேரத்தில் காரைக்காலில் 3 செ.மீ, நாகப்பட்டினத்தில் 2 செ.மீ, சங்கரிதுர்கம், ஜெயங்கொண்டம், நடுவட்டம், செந்துறையில் தலா 1 செ.மீ மழை பதிவாகி உள்ளது.

பிறந்தநாள் வாழ்த்து எழுதலாம்னு இருந்தேன்.. இப்படி மரண செய்தி.. ஜெ.அன்பழகன் குறித்து கஸ்தூரி வருத்தம்பிறந்தநாள் வாழ்த்து எழுதலாம்னு இருந்தேன்.. இப்படி மரண செய்தி.. ஜெ.அன்பழகன் குறித்து கஸ்தூரி வருத்தம்

மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை நீடிக்கிறது. இதனால் மேலும் 3 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம்.

இவ்வாறு வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

English summary
According to IMD Reprot, Tamilnadu and Puducherry will receive rain for next 2 days.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X