ஜெர்மனியின் நாசகாரி கப்பல் குண்டுகளை வீசி சென்னையை தாக்கிய நாள் இன்று.. செப்டம்பர் 22!


சென்னை: ஜெர்மனியின் நாசகாரி கப்பல் 1914ஆம் ஆண்டு இதே நாளில்தான் குண்டுகளை வீசி சென்னையை தாக்கியது.

1914ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி ஜெர்மனியின் எம்டன் நாசகாரிக் கப்பல் இரவு 9:30 மணிக்கு சென்னைத் துறைமுகத்தையும் மற்றும் நகரப் பகுதிகளையும் குண்டுவீசித் தாக்கியது.

மொத்தம் 130 குண்டுகளை அது வீசியது. எம்டனிலிருந்து கிளம்பிய குண்டுகள் சென்னைத் துறைமுகத்திற்கு வெளியே நின்றிருந்த பிரிட்டிஷ் கப்பல், ஆங்கிலேயருக்குச் சொந்தமான 'பர்மா ஷெல் ஆயில் டேங்குகள்', சென்னை உயர்நீதி மன்றம், 'செயின்ட் ஜார்ஜ் கோட்டை' போன்றவற்றில் வீழ்ந்து வெடித்தன.

1941 - யூதர்களின் புத்தாண்டில் உக்ரைனின் வின்னிட்சியா நகரில் 6,000 யூதர்கள் நாசி ஜெர்மனியரினால் கொல்லப்பட்டனர்.

1934 - வேல்சில் சுரங்கம் ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 266 பேர் கொல்லப்பட்டனர்.

1539 - சீக்கிய சமயத்தைத் தோற்றுவித்த குரு நானக் மறைந்தார்.

Have a great day!
Read more...

English Summary

On 1914 September 22, germany's SMS Emden poures 130 bombs in Chennai and chennai port.