ஆடி மாத ராசி பலன்: தமிழ் மாதத்தில் முக்கியமான ஆடி மாதம் சில நாட்களில் பிறக்கவுள்ளது. ஒவ்வொரு தமிழ் மாதத்திற்கு பின்னாலும் ஓர் அறிவியல் உள்ளது. இந்த ஆடி மாதத்தில் பல கிரக நிலைகளில் சில அதிசயங்கள் நிலவுகின்றன. இதன் மூலம் விருச்சிக ராசிக்கு கிடைக்கும் பலன்களை காணலாம்.
ஆடி மாதம் ஜூலை 17 ஆம் தேதியில் இருந்து, ஆகஸ்ட் மாதம் 16 ஆம் வரை இருக்கும். 12 வருடங்களுக்கு பிறகு சிவராஜயோகத்துடன் ஆடி மாதம் பிறக்கிறது. சூரியனும், குரு பகவானும் வீட்டில் இணைந்து உச்ச பலத்துடன் இருப்பதுதான் சிவராஜயோகம். இந்த மாதத்தில் சூரியன், புதன் குரு கடக ராசியில் பயணிக்கவுள்ளனர். சுக்கிரன் கன்னி வீட்டில் பயணிக்க போகிறார்.
செவ்வாய் சுக்கிரன் வீட்டில் அமர்ந்துள்ளார். புதன் பகவான் வக்கிரமாக உள்ளார். ராகு, கேதுவின் தாக்கம் இந்த மாதம் இருக்கும். சுக்கிரன் ராகு சேர்க்கை உள்ளிட்ட நல்ல பலன்களை கொடுக்கும். ஆடி மாதத்தில் விருச்சிக ராசிக்கு என்ன பலன்கள் கிடைக்கும். விருச்சிக ராசி மற்றும் விருச்சிக லக்னத்திற்கு வீடு வாங்குவது, நிலம் வாங்குவது, மண் வாங்குவது, பொன் வாங்குவது போன்ற யோகம் உண்டாகும். நிறைய சுப விரயத்திற்கான பாக்கியம் ஏற்படும். மனதிற்குப் பிடித்து ஆடைகள், ஆபரணங்கள், தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். புதிய பொறுப்புகள் கிடைக்கும். செல்வாக்கு உயரும். தாய் வழி உறவு, தந்தை வழி உறவு மேன்மை அடையும். உத்தியோகத்தில் காணப்பட்டிருந்த சிக்கல்கள் தீரும். படிப்படியாக நல்ல முன்னேற்றம் காணப்படும். பூமி சம்பந்தப்பட்ட விஷயத்தில் இருந்து வந்த சிக்கல் தீரும். பரம்பரையாக இருக்கக்கூடிய சண்டை, சச்சரவுகள் தீரும். சனி வக்கிரத்தில் இருப்பதால் தைரியமாக இருப்பீர்கள். சொகுசாக இருப்பீர்கள். புதிய பொறுப்புகள் கிடைக்கும். இதுவரை காத்திருந்த பொறுப்புகள், ஒருவித முன்னேற்றம் உண்டாகும். ஆடி, ஆவணி மாதத்தில் நிறைய முன்னேற்றங்கள் காணப்படும். உங்களை ஏளனமாகப் பார்த்தவர்கள் கூட ஆச்சரியமாகப் பார்ப்பார்கள். வியாபாரத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். உத்தியோகத்தில் ஏற்றம் பெறுவீர்கள். நம்பிக்கையுடன் இருப்பீர்கள். உத்தியோகத்தில் இருந்த சிக்கல் தீரும்போது மனம் தெளிவடைவீர்கள். உறவுகள் தொடர்பான விஷயங்களில் மேன்மை ஏற்படும். எதிர்பார்க்காத இடத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். சுபகாரியத் தடைகள் நிவர்த்தியாகும். திருமணம், புத்திர சந்தான பாக்கியம், பிள்ளைகளின் திருமணம், உறவினர்களின் திருமணம் என அடுத்தடுத்து நல்ல விஷயங்கள் நடக்கும். பிள்ளைகளிடம் கோபத்தைத் தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளுடன் சமாதானமாக செல்லக்கூடிய விருச்சிக ராசியினர் புத்திசாலிகள். பெற்றோர் மற்றும் பெரியவர்களின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பரம்பரை நோய், தலைவலி விஷயத்தில் அக்கறை தேவை. வாகனம் ஓட்டும்போது மிகுந்த கவனத்துடன் செல்ல வேண்டும். ஏற்றமும், அனுகூலமும் உண்டாகக்கூடிய காலகட்டம். நிலம், வீடு வாங்குவதற்கான அற்புதமான காலம் இது. ஆடி மாதம் என்று பார்க்கத் தேவையில்லை. கண்டிப்பாக முன்பணம் கொடுத்து முடிப்பது நன்மை. கணவன், மனைவி இருவருடைய ஆரோக்கியத்தையும் கவனமாகப் பார்த்துக் கொள்வது நல்லது. பரம்பரையாக இருக்கக்கூடிய நோய் பாதிப்பு தலைதூக்க வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. ஆடி மாதத்தில் குலதெய்வ வழிபாடு உங்களுக்கு ஏற்றத்தைக கொடுக்கும். குலதெய்வத்திற்கு தினந்தோறும் பூஜை செய்வது நன்மை.Aadi Matha Rasi Palan: ராஜா பகவத் மாதிரி இருக்கா.. மேஷ ராசிக்கு அடிக்குது ஜாக்பாட்
விருச்சிகம்
முன்னேற்றம்
ஆடி மாத பலன்: கடக ராசிக்கு கதவை தட்டும் அதிர்ஷ்ட தேவதை.. என்னென்ன பலன்கள் கிடைக்கும்?
சிக்கல் தீரும்
குட்நியூஸ்
அனுகூலம்
வழிபாடு