ஆடி மாத ராசிபலன்: கடகம், சிம்மம், கன்னிக்கு வரும் அதிர்ஷ்டம்.. என்னென்ன பலன்கள் ?


  • ஆடி மாத ராசிபலன்: தமிழ் மாதத்தில் முக்கியமான ஆடி மாதம் இன்று பிறந்துள்ளது. ஒவ்வொரு தமிழ் மாதத்திற்கு பின்னாலும் ஓர் அறிவியல் உள்ளது. இந்த ஆடி மாதத்தில் பல கிரக நிலைகளில் சில அதிசயங்கள் நிலவுகின்றன. இதன் மூலம் கடகம், சிம்மம், கன்னி ராசியினருக்கு கிடைக்கும் பலன்களை காணலாம்.

    Advertisement

    ஆடி மாதம் ஜூலை 17 ஆம் தேதியான இன்றில் இருந்து, ஆகஸ்ட் மாதம் 16 ஆம் வரை இருக்கும். 12 வருடங்களுக்கு பிறகு சிவராஜயோகத்துடன் ஆடி மாதம் பிறக்கிறது. சூரியனும், குரு பகவானும் வீட்டில் இணைந்து உச்ச பலத்துடன் இருப்பதுதான் சிவராஜயோகம். இந்த மாதத்தில் சூரியன், புதன் குரு கடக ராசியில் பயணிக்கவுள்ளனர்.

    Advertisement

    சுக்கிரன் கன்னி வீட்டில் பயணிக்க போகிறார். செவ்வாய் சுக்கிரன் வீட்டில் அமர்ந்துள்ளார். புதன் பகவான் வக்கிரமாக உள்ளார். ராகு, கேதுவின் தாக்கம் இந்த மாதம் இருக்கும். சுக்கிரன் ராகு சேர்க்கை உள்ளிட்ட நல்ல பலன்களை கொடுக்கும். ஆடி மாதத்தில் கடகம், சிம்மம், கன்னி ஆகிய 3 ராசியினருக்கு என்ன பலன்கள் கிடைக்கும்.

    கடக ராசி பலன்

    கடக ராசியினருக்கு அரசுத் துறையில் தேவையில்லாத தொந்தரவுகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. உடனிருப்பவர்கள் விஷயத்தில் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக ஊழியர்களால் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளதால் மிகுந்த கவனம் தேவை. மேலதிகாரிகளிடம் மிகுந்த கவனம் தேவை. தேவையில்லாத வம்புகள், பிரச்சனைகள் வரும் என்பதால் எச்சரிக்கை தேவை.

    Advertisement

    2 ஆம் அதிபதி ராசியிலும், உடன் குருவும் இருப்பதால் இடமாற்றம், தொழில் மாற்றம், உத்தியோக மாற்றம், வியாபார மாற்றம், படிப்பு மாற்றம் போன்றவை ஏற்படும். தேக ஆரோக்கியத்தில் அதீத கவனமாக இருக்க வேண்டும். முதுகு, கழுத்து, சுழுக்கு, நரம்பு போன்ற விஷயத்தில் எச்சரிக்கை தேவை. நரம்பு சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகுந்த கவனம். பிரஷர் ஏறாமலும், குறை ரத்த அழுத்தமும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். துர்க்கை வழிபாடு ஏற்றத்தைத் தரும்.

    சிம்ம ராசி பலன்

    சிம்ம ராசியினருக்கு நிறைய விரயங்கள் ஏற்படும். உத்தியோகம், தொழில், வியாபாரத்தில் பதட்டம் கொள்ளாமல் இருக்க வேண்டும். பொறுமையாக இருப்பதை கடைப்பிடிப்பது நிறைய நன்மைகளை ஏற்படுத்தும். உணர்ச்சிவசப்படுவது, ஆவசேப்படுவதை தவிர்ப்பது நல்லது. உறவுகளை புதுப்பித்துக் கொள்வது நல்லது. தாயார், தந்தை நிறைய உதவிகளை உங்களுக்கு செய்யக்கூடிய காலகட்டமாக இருக்கும்.

    Advertisement

    கடனை நினைத்து யோசித்துக் கொண்டே இருப்பதை தவிர்க்க வேண்டும். கண்டிப்பாக அதற்கு தீர்வு கிடைக்கும். அஷ்டமத்தில் இருக்கும் சனி வக்கிர சனியாக இருப்பதால் குடும்பத்தில் உள்ள உறவுகள் தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு ஏற்படும். கணவன்மார் உறவினர்களிடம் மிகுந்த ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

    காதல் அமைப்பில் அனுகூலம் காணப்படும். ஆனால் திருமண உறவில் நிறைய பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. சூளினியாக நினைத்து எல்லா தெய்வங்களையும் வழிபாடு செய்வது ஏற்றத்தைத் தரும்.

    கன்னி ராசி பலன்

    கன்னி ராசியினருக்கு லாபம், அனுகூலம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும். துணை விஷயத்தில் அனுகூலம் ஏற்படும். குடும்பத்திற்குத் தேவையான பொருள்களை வாங்குவீர்கள். வெளியிடத்தில் காணப்பட்டிருந்த சிக்கல்கள் தீரும். உத்தியோகத்தில் நல்ல அனுகூலம் காணப்படும். வியாபாரத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் சரியாகும்.

    Advertisement

    நீண்ட நாட்களாக இருந்த தடைகள் பரிபூரணமாக நீங்கும். அற்புதம், ஆனந்தமும் ஏற்படும். முன்னேற்றம் நிறைந்த காலகட்டமாக இருக்கும். தொழிலில் இருக்கும் பிரச்சனைகளை சரி செய்வீர்கள். பதவி உயர்வில் இருந்து வந்த தடைகள் நீங்கும். எதிர்பார்க்காத நல்ல விஷயங்கள் நடக்கும் நல்ல அமைப்பு உள்ளது. ஜாயிண்டுகளில் ஏற்படும் வலிகளில் கவனம் தேவை. கன்னி ராசியினருக்கு பிரித்யுங்கரா வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும்.

    English Summary

    Aadi Month 2026 brings career success, financial growth, foreign opportunities and key life changes for Kadagam, simmam and kanni zodiac signs along with a few cautions.