ஆடி மாத ராசி பலன்: பணக்கார யோகம் பெறும் மகரம், கும்பம், மீனம்?.. எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்

  • ஆடி மாத ராசிபலன்: தமிழ் மாதத்தில் முக்கியமான ஆடி மாதம் இன்று பிறந்துள்ளது. ஒவ்வொரு தமிழ் மாதத்திற்கு பின்னாலும் ஓர் அறிவியல் உள்ளது. இந்த ஆடி மாதத்தில் பல கிரக நிலைகளில் சில அதிசயங்கள் நிலவுகின்றன. இதன் மூலம் மகரம், கும்பம், மீனம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்களை காணலாம்.

    Advertisement

    ஆடி மாதம் ஜூலை 17 ஆம் தேதியான இன்றில் இருந்து, ஆகஸ்ட் மாதம் 16 ஆம் வரை இருக்கும். 12 வருடங்களுக்கு பிறகு சிவராஜயோகத்துடன் ஆடி மாதம் பிறக்கிறது. சூரியனும், குரு பகவானும் வீட்டில் இணைந்து உச்ச பலத்துடன் இருப்பதுதான் சிவராஜயோகம். இந்த மாதத்தில் சூரியன், புதன் குரு கடக ராசியில் பயணிக்கவுள்ளனர்.

    Advertisement

    சுக்கிரன் கன்னி வீட்டில் பயணிக்க போகிறார். செவ்வாய் சுக்கிரன் வீட்டில் அமர்ந்துள்ளார். புதன் பகவான் வக்கிரமாக உள்ளார். ராகு, கேதுவின் தாக்கம் இந்த மாதம் இருக்கும். சுக்கிரன் ராகு சேர்க்கை உள்ளிட்ட நல்ல பலன்களை கொடுக்கும். ஆடி மாதத்தில் மகரம், கும்பம், மீனம் ஆகிய 3 ராசியினருக்கு என்ன பலன்கள் கிடைக்கும்.

    மகர ராசி பலன்

    மகர ராசி மற்றும் லக்னத்திற்கு துணை விஷயத்தில் விட்டுக் கொடுத்து செல்லுங்கள். வெளியிடத்தில், உத்தியோகத்தில், தொழிலில், படிப்பு சம்பந்தப்பட்ட விஷயத்தில் இருந்து வந்த தேவையில்லாத பதட்டங்கள் குறையும். கழிவுப் பாதையில் மிகவும் கவனம் தேவை. சிவன், பார்வதி வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். குடும்பத்தில் அந்நியோன்ய குறைபாடு இல்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது.

    Advertisement

    உத்தியோகம், வியாபாரத்தில் ஏற்றம் உண்டாகும். செல்வாக்கு கூடும். இழுபறியாக இருந்த நிலைமைகள் பரிபூரணமாக நீங்கும். தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் ஏற்படும். யோக பலன்கள் அதிகளவில் கிடைக்கும். உறவுகளில் மேன்மை ஏற்படும். உத்தியோகம் ரீதியாக இருந்து வந்த சங்கடங்கள் தீரும். புதிய நம்பிக்கையும், தைரியமும் ஏற்படும். உறவினர்கள் தொடர்பான சங்கடங்கள் தீரும்.

    பெரிய ஆபத்தில் இருந்து பாதுகாப்பு ஏற்படும். பூமி சம்பந்தப்பட்ட விஷயத்தில் இருந்து வந்த சங்கடங்கள் நிவர்த்தியாகும். நிறைய நன்மைகள் நடக்கும். பணங்கள் சமயத்தில் ஆண்களாக இருந்தால் பெண்கள் விஷயத்திலும், பெண்களாக இருந்தால் ஆண்கள் விஷயத்திலும் கவனம் தேவை.

    Advertisement

    கும்ப ராசி பலன்

    கும்ப ராசியினருக்கு தொழில், உத்தியோகம், வியாபாரம், வழக்குகள் ரீதியாக வெற்றிகள் ஏற்படும். செல்வாக்குகள் கூடும். தொழிலில் இருந்த நீண்ட நாள் கஷ்டங்கள் தீரும். புதிய தொழில் மாற்றங்கள் ஏற்படும். வியாபாரத்திலும், உத்தியோகத்திலும் பெரிய செல்வாக்குகளைப் பெறுவீர்கள். இழுபறியாக இருந்த சிக்கல்கள் தீரும். உறவுகள் தொடர்பான விஷயத்திலும் பெரிய அனுகூலமும் சந்தோஷமும் ஏற்படும்.

    பூமி சம்பந்தப்பட்ட விஷயத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். செல்வாக்கு கூடக்கூடிய நல்ல காலகட்டம். தனிப்பட்ட யோக பலன்கள் கிடைக்கும். நீண்ட நாட்களாக இருந்த சங்கடங்கள் தீரும். பணவரவு அற்புதமாக இருக்கும். புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். இழுபறியாக இருந்த நிலைமை மாறும். ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் தேவை.

    Advertisement

    வலுக்கலான இடங்களில் பார்த்து செல்வது நன்மை பயக்கும். எதிரிகளை அசாதாரணமாக எடை போடுவதைத் தவிர்க்க வேண்டும். முதுகு தண்டுவடம் தொடர்பான பாதிப்புகளில் கவனம் தேவை. கணபதி, அம்பாள் வழிபாடு ஏற்றத்தைத் தரும்.

    மீனம் ராசி பலன்

    மீன ராசியினர் குலதெய்வ கோயிலுக்குச் சென்று வருவது யோகத்தையும், நம்பிக்கையும் ஏற்படுத்தும். தொழில், வியாபாரத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். தனிப்பட்ட முறையில் செல்வாக்கு கூடும். தொழிலில் அற்புதமான மாற்றங்கள் ஏற்படும். வேலை ரீதியாக இருந்து வந்த சங்கடங்கள் தீரும். தனிப்பட்ட முறையில் செல்வாக்கு கூடும். இழுபறியாக இருந்த சிக்கல்கள் தீரும்.

    Advertisement

    உத்தியோகம், தொழில், வியாபாரம் ரீதியாக நம்பிக்கை ஏற்படும். எல்லா விஷயத்திலும் ஏற்றத்தை ஏற்படுத்தும். சுவாசக் கோளாறு, அலர்ஜி, வயிறு சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகுந்த கவனம் தேவை. பிள்ளைகள் விஷயத்தில் ஆராய்ச்சி செய்து கொண்டே இருப்பதை தவிர்ப்பது நல்லது. அவர்களுடைய வண்டி, வாகனங்களில் அதீத கவனம் தேவை. அம்பாள் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். கர்ப்பிணிகள் இந்த காலகட்டத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.

    English Summary

    Aadi Month 2026 brings career success, financial growth, foreign opportunities and key life changes for Kadagam, simmam and kanni zodiac signs along with a few cautions.