ஆடி மாத ராசிபலன்: மேஷம் முதல் மிதுனம் வரை.. யாருக்கு ராஜயோகம்? யாருக்கு கவனம் தேவை?


  • ஆடி மாத ராசிபலன்: தமிழ் மாதத்தில் முக்கியமான ஆடி மாதம் இன்று பிறந்துள்ளது. ஒவ்வொரு தமிழ் மாதத்திற்கு பின்னாலும் ஓர் அறிவியல் உள்ளது. இந்த ஆடி மாதத்தில் பல கிரக நிலைகளில் சில அதிசயங்கள் நிலவுகின்றன. இதன் மூலம் மேஷம், ரிஷம், மிதுன ராசிக்கு கிடைக்கும் பலன்களை காணலாம்.

    Advertisement

    ஆடி மாதம் ஜூலை 17 ஆம் தேதியான இன்றில் இருந்து, ஆகஸ்ட் மாதம் 16 ஆம் வரை இருக்கும். 12 வருடங்களுக்கு பிறகு சிவராஜயோகத்துடன் ஆடி மாதம் பிறக்கிறது. சூரியனும், குரு பகவானும் வீட்டில் இணைந்து உச்ச பலத்துடன் இருப்பதுதான் சிவராஜயோகம். இந்த மாதத்தில் சூரியன், புதன் குரு கடக ராசியில் பயணிக்கவுள்ளனர்.

    Advertisement

    சுக்கிரன் கன்னி வீட்டில் பயணிக்க போகிறார். செவ்வாய் சுக்கிரன் வீட்டில் அமர்ந்துள்ளார். புதன் பகவான் வக்கிரமாக உள்ளார். ராகு, கேதுவின் தாக்கம் இந்த மாதம் இருக்கும். சுக்கிரன் ராகு சேர்க்கை உள்ளிட்ட நல்ல பலன்களை கொடுக்கும். ஆடி மாதத்தில் மேஷம், ரிஷபம், மிதுனம் ஆகிய 3 ராசியினருக்கு என்ன பலன்கள் கிடைக்கும்.

    மேஷம் ராசி பலன்

    மேஷ ராசியினருக்கு நிறைய தெய்வ காரியங்களில் ஈடுபடுவீர்கள். தொழில், உத்தியோகம், வியாபாரம் தொடர்பான பிரச்சனைகளை கோபத்தை தவிர்ப்பது நல்லது. இந்த ஆடி மாதத்தில் அசைவத்தை தவிர்த்து சைவத்தை சாப்பிடுவது நல்லது. அல்லது திங்கள்கிழமை தோறும் அசைவம் சாப்பிடுவதை தவிர்ப்பது அற்புதமான ஏற்றத்தையும், வெற்றியையும் ஏற்படுத்தும்.

    Advertisement

    தாய், தந்தை உறவுகளுடன் விட்டுக் கொடுத்துச் செல்வது நிறைய நன்மைகளை ஏற்படுத்தும். தாயுடன் தகராறு வைத்துக் கொள்வதை தவிர்ப்பது நல்லது. ரத்தத்தில் பரவும் தொற்று நோய்களில் அதீத கவனம் தேவை. அங்காளம்மன் வழிபாடு உங்களுக்கு ஏற்றத்தைத் தரும்.

    ரிஷப ராசி பலன்

    ரிஷப ராசியினருக்கு உறவுகள் தொடர்பான விஷயத்தில் வெற்றிகள் ஏற்படும். லாபம் ஏற்படும். அசையும், அசையா பொருள்கள் சேர்க்கை ஏற்படும். தொழிலில் நிறைய மாற்றங்கள் ஏற்படும். ஆடி மாதத்தில் பூமி பூஜை போடுவதற்கான யோகம் உண்டாகும். புதிய வண்டி, வாகனங்களை வாங்குவீர்கள். உள்ளூர், வெளியூர், வெளிநாடு பயணம், கடல் கடந்து பயணம், தொழில் நிமித்தமான பயணங்களை மேற்கொள்வீர்கள்.

    Advertisement

    உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும். எடுத்த காரியங்களில் வெற்றி ஏற்படும். தனிப்பட்ட முறையில் செல்வாக்கு கூடும். உங்களுக்கும் உங்களை சார்ந்தவர்களுக்கும் அனுகூலம் ஏற்படும். ஏற்றங்கள் நிறைந்த காலகட்டம். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். மகாலட்சுமி வழிபாடு உங்களுக்கு சகலவித முன்னேற்றத்தையும் தரும். லட்சுமி ஸ்தோத்திரம் கேட்பது நன்மையைத் தரும்.

    மிதுன ராசி பலன்

    மிதுன ராசியினர் பிள்ளைகள் விஷயத்தில் கோபத்தை தவிர்ப்பது நல்லது. பழைய கடன்களை அடைத்து முடிப்பீர்கள். ஆரோக்கியத்தில் இதுவரை இருந்து வந்த பிரச்சனைகள் எல்லாமே சரி செய்யும் அமைப்பு உள்ளது. மற்றவர்களிடம் வாக்குவாதம் வைத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. வார்த்தைகளில் அனுகூலம் ஏற்படும்.

    Advertisement

    தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பில் அற்புதமான ஏற்றம் ஏற்படும். வண்டி, வாகனங்களில் மாற்றங்கள் ஏற்படும். எதிர்பார்க்காத இடத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். இழுபறியாக இருந்த கஷ்டங்கள் தீரும். உத்தியோகம், வியாபாரம், தொழிலில் ஏற்றம் ஏற்படும். அடுத்தடுத்து நிறைய நன்மைகள் நடக்கும். மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

    போனில் சண்டை போடுவது, கத்துவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். சைபர் பிரச்சனைகள் வரும் என்பதால் கவனம் தேவை. படபடப்பு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். எந்த தெய்வத்தை வழிபட்டாலும் வராஹி அம்மனை நினைத்து வழிபாடு செய்வது நல்லது. வராஹி மந்திரம் தினந்தோறும் செல்வது ஏற்றத்தைத் தரும்.

    English Summary

    Aadi Month 2026 brings career success, financial growth, foreign opportunities and key life changes for Mesham, rishabam and mithunam zodiac signs along with a few cautions.