ஆடி மாதத்தில் இந்த 5 ராசிகள் உஷார்.. கடகத்தில் சூரியன் சஞ்சாரம் தரும் முக்கிய எச்சரிக்கை!

  • ஆடி மாத ராசி பலன்: தமிழ் மாதத்தில் முக்கியமான ஆடி மாதம் இன்று பிறந்துள்ளது. ஒவ்வொரு தமிழ் மாதத்திற்கு பின்னாலும் ஓர் அறிவியல் உள்ளது. இந்த ஆடி மாதத்தில் பல கிரக நிலைகளில் சில அதிசயங்கள் நிலவுகின்றன. இந்த ஆடி மாதத்தில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

    Advertisement

    ஆடி மாதம் ஜூலை 17 ஆம் தேதியில் இருந்து, ஆகஸ்ட் மாதம் 16 ஆம் வரை இருக்கும். 12 வருடங்களுக்கு பிறகு சிவராஜயோகத்துடன் ஆடி மாதம் பிறக்கிறது. சூரியனும், குரு பகவானும் வீட்டில் இணைந்து உச்ச பலத்துடன் இருப்பதுதான் சிவராஜயோகம். இந்த மாதத்தில் சூரியன், புதன் குரு கடக ராசியில் பயணிக்கவுள்ளனர்.

    Advertisement

    சுக்கிரன் கன்னி வீட்டில் பயணிக்க போகிறார். செவ்வாய் சுக்கிரன் வீட்டில் அமர்ந்துள்ளார். புதன் பகவான் வக்கிரமாக உள்ளார். ராகு, கேதுவின் தாக்கம் இந்த மாதம் இருக்கும். சுக்கிரன் ராகு சேர்க்கை உள்ளிட்ட நல்ல பலன்களை கொடுக்கும். ஆடி மாதத்தில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசியினருக்கு என்ன பலன்கள் கிடைக்கும்.

    மேஷம் ராசி பலன்

    மேஷ ராசியினருக்கு நிறைய தெய்வ காரியங்களில் ஈடுபடுவீர்கள். தொழில், உத்தியோகம், வியாபாரம் தொடர்பான பிரச்சனைகளை கோபத்தை தவிர்ப்பது நல்லது. இந்த ஆடி மாதத்தில் அசைவத்தை தவிர்த்து சைவத்தை சாப்பிடுவது நல்லது. அல்லது திங்கள்கிழமை தோறும் அசைவம் சாப்பிடுவதை தவிர்ப்பது அற்புதமான ஏற்றத்தையும், வெற்றியையும் ஏற்படுத்தும்.

    Advertisement

    தாய், தந்தை உறவுகளுடன் விட்டுக் கொடுத்துச் செல்வது நிறைய நன்மைகளை ஏற்படுத்தும். தாயுடன் தகராறு வைத்துக் கொள்வதை தவிர்ப்பது நல்லது. ரத்தத்தில் பரவும் தொற்று நோய்களில் அதீத கவனம் தேவை. அங்காளம்மன் வழிபாடு உங்களுக்கு ஏற்றத்தைத் தரும்.

    சிம்ம ராசி பலன்

    சிம்ம ராசியினருக்கு நிறைய விரயங்கள் ஏற்படும். உத்தியோகம், தொழில், வியாபாரத்தில் பதட்டம் கொள்ளாமல் இருக்க வேண்டும். பொறுமையாக இருப்பதை கடைப்பிடிப்பது நிறைய நன்மைகளை ஏற்படுத்தும். உணர்ச்சிவசப்படுவது, ஆவசேப்படுவதை தவிர்ப்பது நல்லது. உறவுகளை புதுப்பித்துக் கொள்வது நல்லது. தாயார், தந்தை நிறைய உதவிகளை உங்களுக்கு செய்யக்கூடிய காலகட்டமாக இருக்கும்.

    Advertisement

    கடனை நினைத்து யோசித்துக் கொண்டே இருப்பதை தவிர்க்க வேண்டும். கண்டிப்பாக அதற்கு தீர்வு கிடைக்கும். அஷ்டமத்தில் இருக்கும் சனி வக்கிர சனியாக இருப்பதால் குடும்பத்தில் உள்ள உறவுகள் தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு ஏற்படும். கணவன்மார் உறவினர்களிடம் மிகுந்த ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

    காதல் அமைப்பில் அனுகூலம் காணப்படும். ஆனால் திருமண உறவில் நிறைய பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. சூளினியாக நினைத்து எல்லா தெய்வங்களையும் வழிபாடு செய்வது ஏற்றத்தைத் தரும்.

    விருச்சிகம் ராசி பலன்

    விருச்சிக ராசியினர் சோம்பலைத் தவிர்ப்பது ஏற்றத்தைத் தரும். யோக பலன்கள் அதிகளவில் கிடைக்கும். துணையிடம் வாக்குவாதம் வைத்துக் கொள்ளாமல் இருப்பது நன்மை பயக்கும். தொழில் ரீதியாக காணப்பட்டிருந்த கஷ்டங்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். எதிர்பார்க்காத இடத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். இழுபறியாக இருந்து வந்த சிக்கல்கள் தீரும்.

    Advertisement

    அக்கம்பக்கத்தில் வாக்குவாதம் வைத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. பயணங்களின்போது புதிதாக அறிமுகமாகும் நபர்களிடம் கவனம் தேவை. வங்கிகளுக்குச் சென்றுவிட்டு வருபவர்கள், விலை உயர்ந்த பொருள்களை கையாள்பவர்கள் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். எல்லா விஷயங்களிலும் நன்மை கிடைக்கும். புதன்கிழமை தோறும் பெருமாள், தாயார் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும்.

    மகாலட்சுமிக்கு தாமரை கொடுப்பது நன்மையைத் தரும். தாய் தந்தையின் ஆரோக்கியத்தைப் பார்த்துக் கொள்ள வேண்டும். ரத்தத்தில் பரவும் தொற்று நோய், ரத்த அழுத்தம், கொழுப்பு, சர்க்கரை தொடர்பான பாதிப்புகளில் கவனம் தேவை.

    கும்ப ராசி பலன்

    கும்ப ராசியினருக்கு தொழில், உத்தியோகம், வியாபாரம், வழக்குகள் ரீதியாக வெற்றிகள் ஏற்படும். செல்வாக்குகள் கூடும். தொழிலில் இருந்த நீண்ட நாள் கஷ்டங்கள் தீரும். புதிய தொழில் மாற்றங்கள் ஏற்படும். வியாபாரத்திலும், உத்தியோகத்திலும் பெரிய செல்வாக்குகளைப் பெறுவீர்கள். இழுபறியாக இருந்த சிக்கல்கள் தீரும். உறவுகள் தொடர்பான விஷயத்திலும் பெரிய அனுகூலமும் சந்தோஷமும் ஏற்படும்.

    Advertisement

    பூமி சம்பந்தப்பட்ட விஷயத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். செல்வாக்கு கூடக்கூடிய நல்ல காலகட்டம். தனிப்பட்ட யோக பலன்கள் கிடைக்கும். நீண்ட நாட்களாக இருந்த சங்கடங்கள் தீரும். பணவரவு அற்புதமாக இருக்கும். புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். இழுபறியாக இருந்த நிலைமை மாறும். ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் தேவை.

    வலுக்கலான இடங்களில் பார்த்து செல்வது நன்மை பயக்கும். எதிரிகளை அசாதாரணமாக எடை போடுவதைத் தவிர்க்க வேண்டும். முதுகு தண்டுவடம் தொடர்பான பாதிப்புகளில் கவனம் தேவை. கணபதி, அம்பாள் வழிபாடு ஏற்றத்தைத் தரும்.

    மீனம் ராசி பலன்

    மீன ராசியினர் குலதெய்வ கோயிலுக்குச் சென்று வருவது யோகத்தையும், நம்பிக்கையும் ஏற்படுத்தும். தொழில், வியாபாரத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். தனிப்பட்ட முறையில் செல்வாக்கு கூடும். தொழிலில் அற்புதமான மாற்றங்கள் ஏற்படும். வேலை ரீதியாக இருந்து வந்த சங்கடங்கள் தீரும். தனிப்பட்ட முறையில் செல்வாக்கு கூடும். இழுபறியாக இருந்த சிக்கல்கள் தீரும்.

    உத்தியோகம், தொழில், வியாபாரம் ரீதியாக நம்பிக்கை ஏற்படும். எல்லா விஷயத்திலும் ஏற்றத்தை ஏற்படுத்தும். சுவாசக் கோளாறு, அலர்ஜி, வயிறு சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகுந்த கவனம் தேவை. பிள்ளைகள் விஷயத்தில் ஆராய்ச்சி செய்து கொண்டே இருப்பதை தவிர்ப்பது நல்லது. அவர்களுடைய வண்டி, வாகனங்களில் அதீத கவனம் தேவை. அம்பாள் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். கர்ப்பிணிகள் இந்த காலகட்டத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.

    English Summary

    Aadi Month 2026 brings Shiva Raja Yogam, with astrologers advising Mesham, simmam, viruchigam, kumbam, meenam natives to stay cautious while making the most of emerging opportunities.